ரஜினிகாந்த், விஜய்.. யாரு நம்பர் ஒன்.. கிங் காங் சொன்ன சூப்பர் பதில்.. இப்படி போட்டு பொளந்துட்டாரே!
சென்னை: தன்னையும் நடிகர் விஜய்யையும் கம்பேர் பண்ணாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு என லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகர் யார் என்கிற கேள்விக்கு காமெடி நடிகர் கிங் காங் அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1988 ஆம் ஆண்டு வெளியான பாண்டியராஜனின் ஊரத் தெரிஞ்சுகிட்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் கிங் காங். அன்பு கட்டளை, நெத்தியடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அதிசய பிறவி, போக்கிரி மற்றும் சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கிங் காங்.

ரஜினிக்கு குரு: அதிசயப் பிறவி திரைப்படத்தில் கிங்காங் நடனமாடிய காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கிங் கங்கை குரு என்றும் ரஜினியின் சிஷ்யா என்றும் அவர் அழைக்க காரணமே ரஜினிகாந்த் தான் என்றும் டைரக்டர் எஸ்பி முத்துராமன் முதலில் ரஜினி இந்த ஐடியாவை சொன்னபோது ஒர்க்அவுட் ஆகுமா என யோசித்தார். ஆனால் இது கரெக்டா இருக்கும் அப்படி என ரஜினிகாந்த் சொல்லி அந்த காமெடி காட்சியை உருவாக்கினார் என கிங் காங் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினியை பார்க்க முடியவில்லை: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது நிகழ்ச்சியில் தனக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், அந்த விருதை எடுத்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவர் கைகளில் கொடுத்து வாங்க வேண்டும் என விருப்பப்பட்டேன். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்துக்கு தகவல் தெரிந்த போது அவர் திடீரென எனக்கு போன் செய்து நலம் விசாரித்து, இப்போ கொரோனா காலமாக இருக்கிறது சீக்கிரமே குடும்பத்துடன் வாங்க சந்திக்கலாம் என்றார். ஆனால், இன்னமும் அவரை சந்திக்கும் வாய்ப்பு சரியாக அமையவில்லை என கூறியுள்ளார் கிங் காங்.
யாரு நம்பர் ஒன்: ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே தமிழ் துறையில் தற்போது புதிய போட்டி நிலவி வரும் நிலையில், இவர்கள் இருவரில் யார் நம்பர் ஒன் என்கிற கேள்விக்கு பதில் அளித்த கிங் காங், ரஜினிகாந்த் 47 வருஷமா சூப்பர் ஸ்டாரா இருக்காரு, இப்போ இருக்குற இளைஞர்களுக்கு விஜய்யை பிடிக்கிறது. தமிழ் சினிமாவிம் இரண்டு பெரும் தூண்கள் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். அவர்களுக்கு அடுத்து விஜய், அஜித் அவர்களை தொடர்ந்து தனுஷ் சிம்பு என ஜெனரேசன் மாறுகிறது.
விஜய்யும் ஒரு தூண்: ஆனால், இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு தலைவரு டஃப் கொடுப்பது கடவுள் கொடுத்த வரம் தான். இருவரையும் கம்பேர் செய்வதே சரி இல்லை. ஒரு வீட்டுக்கு அனைத்து தூண்களும் முக்கியமானது. ரஜினிகாந்த் ஒரு தூண் என்றால், விஜய் ஒரு தூண். அவரது 50வது படமான சுறா படத்தில் எனக்கும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பெரிய விஷயம் நடிகர்களை வைத்து போட்டி அரசியல் செய்ய வேண்டாம் என பளிச்சென பேசியுள்ளார். காட்டில் சிங்கம் இருக்கும், யானை இருக்கும், சிறுத்தை இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனிச் சிறப்புடன் இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











