வடிவேலுவின் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!
சென்னை : நடிகர் வடிவேலு மீண்டும் திரைத்துறையில் எப்போது நடிக்க வருவார் என ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.
Recommended Video
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து இப்பொழுது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லீ நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிப்பதிலிருந்து தள்ளி
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வைகை புயல் வடிவேலு. இவரது திரைப்படங்களைப் பார்த்து சிரிக்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இவரது காமெடி அமைந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து தள்ளி இருந்தார்.

பாதிலேயே நின்றுபோனது
எத்தனை காமெடியன்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் வடிவேலு நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமாக இருந்தது. எனவே கத்திச்சண்டை மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் மீண்டும் முழு மூச்சுடன் நடித்த தயாராக இருந்தார் வடிவேலு ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தொடங்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் பதிலேயே நின்றுபோனது .

நடிப்பாரா மாட்டாரா
வடிவேலு ஹீரோவாக இரட்டை வேடத்தில் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் தயாராக இருந்தது. படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு சில நாட்கள் சென்றபின் தயாரிப்பு குழுவுக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வடிவேலு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் திரைத்துறையில் இருந்தது.

நாய் சேகர் ரிட்டன்ஸ்
ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த நேரத்தில் இப்பொழுது புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தலைநகரம் ,மருதமலை, படிக்காதவன்,அலெக்ஸ் பாண்டியன், கத்தி சண்டை போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்ற திரைப்படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. கதாநாயகியே இல்லாமல் முழுக்க முழுக்க வடிவேலுவை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்திருந்தது.

ரெடின் கிங்ஸ்லீ நடிக்கிறார்
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்து வரும் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லீ இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோலமாவு கோகிலா,எல் ஜி கே, நெற்றிக்கண் மற்றும் சமீபத்தில் வெளியான டாக்டர், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரெடின் கிங்ஸ்லீ இப்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணைந்துள்ள செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











