டி.ராஜேந்தர் நலம்பெற வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் கூல் சுரேஷ்
சென்னை : நடிகர் டி.ராஜேந்தர் நலம் பெற வேண்டி காமெடி நடிகர் கூல் சுரேஷ் கோயிலில் அங்கப்பிரதட்ணம் செய்து வேண்டுதல் நிறைவேற்றி உள்ளார்.

நடிகரும், டைரக்டருமான டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் தனது தந்தை டி.ராஜேந்தரின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், எனது தந்தை டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வழி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக கூறி இருந்தார்.
அதே சமயம், டி.ராஜேந்தர் சுயநினைவுடன் இருப்பதாகவும், விரைவில் ரசிகர்களை அவர் சந்திப்பார் என்றும் நம்பிக்கையுடன் கூறி இருந்தார் சிம்பு. தனது தந்தை மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து டி.ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட உள்ளதாக ஒரு தகவலும், மற்றொரு தகவலாக அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் டி.ராஜேந்தர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக அவரது ரசிகரும், ஆதரவாளருமான காமெடி நடிகர் கூல் சுரேஷ், திருவண்ணாமலை கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்தும், எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினார். டி.ராஜேந்தரை அப்பா என்றே அன்னாக அழைக்கும் பழக்கம் கொண்டவர் கூல் சுரேஷ். டி.ராஜேந்தர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் இவரை நிச்சயம் பார்க்க முடியும்.
கூல் சுரேஷ் அங்கபிரதட்சணம் செய்த தகவல் அறிந்து ரசிகர்கள் பலரும் டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய சிறப்பு பிரரா்த்தனைகள் செய்து, வழிபாடு நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











