twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழக முதல்வரை சந்தித்த விவேக் மனைவி மற்றும் மகள்... எதுக்காக தெரியுமா?

    |

    சென்னை : நடிகர் விவேக் உயிரிழந்து ஒரு ஆண்டு கடந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் காலமானார் விவேக். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் மகள் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

    நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம்.. மாதவன் மகன் சாதனை.. அக்ஷய் குமார், விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு!நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம்.. மாதவன் மகன் சாதனை.. அக்ஷய் குமார், விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு!

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக் 30 ஆண்டுகாலமாக தமிழக ரசிகர்களை தனது காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் கட்டிப் போட்டவர். தான் ஒரு காமெடி நடிகர் மட்டுமல்ல தனக்கு எமோஷனல் நடிப்பும் சிறப்பாக வரும் என்று பல படங்களில் நிரூபித்தவர். நடிப்பில் மட்டுமின்றி சமூக பொறுப்புகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் விவேக்.

    33 லட்சம் மரக்கன்றுகள்

    33 லட்சம் மரக்கன்றுகள்

    முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் வழியில் மரங்களை நடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் வாழ்நாளில் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர். மரங்களைப் பற்றிய சரியான புரிதலில் அதன் வளர்ப்பை மேற்கொண்டவர். பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்களையும் தன்னுடைய பணியில் சேர்த்துக் கொண்டார்.

    சமூக பணிகளில் விவேக்

    சமூக பணிகளில் விவேக்

    இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்த நிலையில், மகன் பிரசன்னகுமார், தனது 14வது வயதில் உயிரிழந்தார். இதையடுத்து மனதளவில் உடைந்த விவேக், அதை தொடர்ந்தே சமூக பணிகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு, அந்த விஷயத்தில் இருந்து வெளியே வந்தார்.

    ஏப்ரல் 17, 2021ல் மரணம்

    ஏப்ரல் 17, 2021ல் மரணம்

    இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர்களும் உடைந்து போனார்கள். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதன் மூலம் அவரது சமூக பணிகளும் முடங்கியது.

    முதல்வரிடம் கோரிக்கை

    முதல்வரிடம் கோரிக்கை

    இந்நிலையில் தற்போது அவரது மனைவி அருள் செல்வி மற்றும் மகள் தேஜஸ்வினி இன்றைய தினம் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலிகிராமம் பகுதியில் உள்ள சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    விவேக் பெயரில் சாலை

    விவேக் பெயரில் சாலை

    முதல்வர் முக ஸ்டாலின் இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு இதுகுறித்து பரிசீலீப்பதாக வாக்களித்துள்ளார். சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பான நடிகராக இருந்ததுடன் சமூக பணிகளிலும் தன்னை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்ட விவேக்கின் பெயரில் சாலை என்பது அவருக்கு செய்யக்கூடிய பெருமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    English summary
    Vivek's wife and daughter met TN CM MK Stalin today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X