மகன் +2வில் பாஸ் ஆனதற்கு பால்கோவா கொடுத்தாரே முத்துக்காளை.. எந்த கல்லூரியில் சேர்த்திருக்காரு தெரியுமா?

சென்னை: "செத்து செத்து விளையாடலாமா" என வடிவேலுவிடமே வம்பு இழுத்து காமெடி காட்சியில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மகன் நடந்து முடிந்த +2 பொதுத் தேர்வில் பாஸ் ஆன செய்திகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், முத்துக்காளை தனது மகனை கல்லூரியில் சேர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

காதலன் படத்தில் பிரபுதேவா, வடிவேலு நடனமாடிய "ஊர்வசி ஊர்வசி" பாடலில் அட்மாஸ்பியராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் முத்துக்காளை. வடிவேலுவின் காமெடி டீமில் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

Comedy Actor Muthukaalai son joined Vels College today

சிகரெட் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து வாழ்க்கையையே தொலைத்து விட்டேன் என தெரிவித்த முத்துக்காளை அதையெல்லாம் விட்டு விட்டு படிப்பின் மீது ஆர்வம் எழுந்த நிலையில், நடிகராக மாறி சம்பாதித்த பணத்தை வைத்து ஒன்றுக்கு 3 டிகிரி படித்து முடித்துள்ளார். தற்போது அவரது மகன் வாசன் முரளியும் கல்லூரி படிப்பில் சேர்ந்துள்ளார்.

+2வில் நல்ல மார்க்: காதலன், பொன்மனம், வாலி, சுயம்வரம், மின்சாரக் கண்ணா என ஏகப்பட்ட படங்களில் நடித்த முத்துக்காளை தனது மகனை நன்கு படிக்க வைத்த நிலையில், +2 தேர்வில் 600க்கு 438 மார்க் எடுத்து பாஸ் ஆனார். தனது மகன் பாஸ் ஆனதை கொண்டாடும் விதமாக மகனுக்கு ரொம்பவே பிடித்த பால்கோவாவை வாங்கிக் கொடுத்த புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார் முத்துக்காளை. இந்நிலையில், வேல்ஸ் கல்லூரியில் தனது மகனை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comedy Actor Muthukaalai son joined Vels College today

கல்லூரியில் சேர்ந்த முத்துக்காளை மகன்: இன்று முதல் வேல்ஸ் கல்லூரி மாணவர் ஆக நடிகர் முத்துக்காளை மகன் வாசன் முரளி மாறியுள்ளார். தன் மகன் வாசன் முரளியை, வேல்ஸ் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்க வைக்க தொடக்க நாளான இன்று, கல்லூரியில் சேர்த்து விட்டு வந்ததாக காமெடி நடிகர் முத்துக்காளை புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், தன் மகன் கல்லூரியில் படிக்க உதவிய நடிகர் சங்கம், பெப்சி, ஸ்டண்ட் யூனியன், மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் முத்துக்காளை. அப்பாவை போல இவரும் பல டிகிரிகள் வாங்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X