சாதிக்க வயது தடை இல்லை.. 58 வயதில் சாதித்த முத்துக்காளை.. குவியும் வாழ்த்து
சென்னை: நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மூன்று பட்டங்களை பெற்று தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.
ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையில் தனது 18வது வயதில் சென்னைக்கு வந்தார். சினிமாவில் சண்டை பயிற்சியாளராக முத்துக்காளை பணியாற்றி உள்ளார். இதையடுத்து, 1997ம்ஆண்டு பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு போன்ற படங்களில் நடித்தார்.

நகைச்சுவை நடிகர் முத்துக்காளை: இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது, நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நட்பு ஏற்பட அவருடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்தார். அவருடன் இணைந்து செத்து செத்து விளையாடலாம் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் என பலத்திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தார்.
படவாய்ப்பு: ஆனால், வடிவேலுக்கு மார்க்கெட் குறைந்ததை தொடர்ந்த முத்துக்காளைக்கும் படவாய்ப்பு இல்லாமல் போனது. பெரிதாக படவாய்ப்பு இல்லாதால், இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. நேற்று உடல் நலக்குறைவால் போண்டா மணி உயிரிழந்த நிலையில், முத்துக்காளை இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
58 வயதில் மூன்று பட்டம்: இந்நிலையில்,58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த B.Lit தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேச்சி பெற்றுள்ளார். தற்போது, B.Lit தமிழில் தேர்வெழுதி அதிலும் பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சாதிக்க வயது தடைஇல்லை: சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்காளை தனது கனவை 58 வயதில் நிறைவேற்றி இருக்கிறார். வயது என்பது Just நம்பர் மட்டும் தான்.... சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை முத்துக்காளை நிரூபித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











