ஓவர் குடியால் சீரழிந்த முத்துக்காளை.. 3 டிகிரி வாங்க அந்த பெண் பிரபலம் தான் காரணமா?

சென்னை: நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்ற நடிகர். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் மற்றொரு விஷயத்திற்கு மிகவும் புகழ் பெற்றவர். அதாவது, படிப்பு. அவரது இளம் வயதில் சரியாக படிக்காததால், முத்துக்காளை அதன் பின்னர் பட்டப்படிப்பு பயின்றார்.

பிரபல நடிகர் முத்துக்காளை, ஆரம்பத்தில் கோலிவுட்டில் ஸ்டண்ட் கலைஞராகப் பணிபுரிந்தார். பின்னர் நகைச்சுவை நடிகராக மாறி, வடிவேலு உள்ளிட்ட பலருடன் இணைந்து பல காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்ப காலத்தில் முறையாகப் படிக்காததால் ஏற்பட்ட கஷ்டங்களை சந்தித்த அவர், தனது வயதை பொருட்படுத்தாமல் மீண்டும் கல்வி கற்று, பட்டம் பெற்றார்.

இப்படி இருக்கும்போது 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் தனது மகன் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அடுத்து தனது மகிழ்ச்சியை அனைவருக்கும் பால்கோவா கொடுத்து வெளிப்படுத்தினார். முத்துக்காளை மூன்று பட்டங்கள் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அவர் மூன்று பட்டங்களை பெற முக்கியமான காரணம், அதாவது அவருக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் நடன இயக்குநர் கலா மாஸ்டர் தான்.

Comedy Actor Muthukalai Thanks to Kala Master She Motivates For Stop Alcohol
Photo Credit:

ஓவர் போதை: இது தொடர்பாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, " நான் ஒரு கட்டத்தில் மதுவுக்கு ரொம்பவும் அடிமையாகிவிட்டேன். ஒருநாள் படப்பிடிப்புத் தளத்தில் எனது காட்சியை படமாக்கும்போது நான் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு டேக்குகள் வாங்கிவிட்டேன். இதைப் பார்த்த கலா மாஸ்டர் என்னிடத்தில் தனியாக அமர்ந்து பேசினார். அப்போது அவர், " ஏன் அண்ணா, என்ன ஆச்சு? நீங்க எல்லாமே ஒரே டேக்கில் நடித்து கொடுப்பவர் ஏன் இப்படி மூன்று, நான்கு டேக்குகள் வாங்குகிறீர்கள் என்று கேட்டர்.

கலா மாஸ்டருக்கு நன்றி: அந்த நேரத்தில் என்னுடைய பிரச்னையாக இருந்தது மது. கலா மாஸ்டர் சொன்ன பிறகு நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். இந்த போதையால் பட வாய்ப்புகள் அதிகம் கெடுகிறது. இதற்கு ஒரு தீர்வு கட்ட வேண்டும் என்றால், மதுவை முற்றிலுமாக கைவிட வேண்டும். நான் மதுவைக் கைவிட்டு 9 வருடங்கள் ஆகிறது. அதனால் தான் நான் மூன்று டிகிரிகள் வாங்க முடிந்தது. இந்த நேரத்தில் நான் கலா மாஸ்டருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X