எவ்வளவு முயற்சி பண்ணியும் மனைவியை காப்பாத்த முடியல.. மனைவியை இழந்து கதறிய நடிகர் முத்துக்காளை

சென்னை: கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 9' மணியளவில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை காலமானார்

ஸ்டண்ட் நடிகர் முத்துக்காளை ‌மனைவி M..மாலதி . வயது 47. அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி ‌என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

Comedy Actor Muthukalai Wife Malathy Passes Away due to Illness

நடிகர் முத்துக்காளை அவரது மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுக் கொண்டுள்ளார். இறுதிச்சடங்கு இன்று இரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது.

முத்துக்காளை மனைவி மரணம்: நகைச்சுவை நடிகர் முத்துக்காளையை தமிழ் சினிமாவில் அனைவரும் அறிவார்கள் தான். கடந்த ஆண்டு தனது மகன் தேர்வில் பாஸ் ஆகிவிட்டான் என்றும் வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என சந்தோஷமாக கூறிய முத்துக்காளை இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளார். அதற்கு காரணம் அவரது மனைவியின் திடீர் மரணம் தான்.

17 நாட்களாக போராட்டம்: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவி மாலதியை சேர்த்து அவருக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு பிரச்னையை தீர்க்க போராடி வந்தார். தன்னிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது என்றும் தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு உதவ வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் வீடியோ மூலம் சமீபத்தில் முத்துக்காளை கோரிக்கை வைத்தார். அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து உரிய உதவிகளை செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி முத்துக்காளை மனைவி மாலதி உயிரிழந்தது அவரையும் அவரது குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு: எப்படியாவது தனது மனைவியை காப்பாற்றி விட வேண்டும் என போராடிய முத்துக்காளை கடைசியில் சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழந்த நிலையில் மொத்தமாக உடைந்து போயுள்ளார். தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி ‌என்ற திருக்கோதையாபுரத்துக்கு மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டுச் செல்கிறார். முத்துக்காளைக்கு சினிமா பிரபலங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். முத்துக்காளை மனைவி உயிரிழந்த தகவல் அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X