Nanjil Vijayan: குழந்தையை கையில் வாங்கிய அந்த நொடி.. கதறி அழுத நாஞ்சில் விஜயன்!

சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்து இருப்பார். எந்த கேரக்டராக இருந்தாலும், அதில் நன்றாக பொறுந்தி நடிப்பது இவருக்கு கை வந்த கலை. அவரின் மனைவி மரியாவிற்கு கடந்த மாதம் தடபுடலாக வளைகாப்பு நடைபெற்ற நிலையில், தற்போது, இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

நகைச்சுவையில் கலக்கி வந்த நாஞ்சில் விஜயனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மரியா மேக்ரினா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு பின் நாஞ்சில் விஜயன் தனது மனைவியுடன் விதவிதமான ரீல்ஸ் போட்டு அசத்தி வந்தார். இதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், இருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு ஈடாக போட்டி போட்டு பல டாஸ்க்களை செய்து அசத்தினார்கள்.

Nanjil vijayan girl baby

நாஞ்சில் விஜயன்: கடந்த சில மாதங்களுக்கு முன் மரியா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, கடந்த மாதம், நாஞ்சில் விஜயனின் மனைவி மரியாவுக்கு அரும்பாக்கத்தில் உள்ள ஐஸ்வர்யா மஹாலி தடபுடலாக வளைகாப்பு நடந்தது. இதில், நடிகை நளினி, தாடி பாலாஜி, புகழ், சாய் சக்தி, ஈரோடு மகேஷ், அனிதா சம்பத், ரஞ்சித், பிக் பாஸ் தாமரைச்செல்வி, ரோபோ சங்கர் என பலர் கலந்து கொண்டனர். இந்த வளைகாப்பில், ரோபோ சங்கர், அவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, மருமகன் கார்த்திக்குடன் சீர்வரிசையோடு வந்து அசத்தில் இருந்தார். அதன்பின் இவர்கள் இருவருமே கர்ப்பகால போட்டோசூட் நடத்தி இருந்தார்கள்.

தந்தை ஆனார்: இதையடுத்து இன்று நாஞ்சில் விஜயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் வாங்கிய நாஞ்சில் விஜயன் கதறி அழுது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நாஞ்சில் விஜயன், சித்திரை முழு நிலவில் என்னை அப்பா என்று அழைப்பதற்கு இந்த புவியில் புதிய தாய் ஒரு உயிர் பிறந்து விட்டது. வாழ்க்கையில் நான் பட்ட வேதனைகள் எத்தனை எத்தனையோ அத்தனையும் உந்தன் முகம் பார்க்கும் பொழுது மறந்து போனது என் தங்கமே இனிமேல் எந்தன் உலகம் நீ தான் பதிவிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பின் நாஞ்சில் விஜய்யின் மனைவி மரியா, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதில், இவர் என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது இவரது வயதை சொல்லவே இல்லை. ஆனால், இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும், என்னை பெண் பார்க்க வந்துபோது கூட இவர் தலை, மீசை எல்லாம் வெள்ளையாகவே இருந்தது. திருமணத்திற்கு பின் இவரது சாயம் வெளுத்தது, தலை பூரா வெள்ளை முடிதான் என்று தனது கணவர் குறித்து நகைச்சுவையாக கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X