யாரும் நெருங்க முடியாது.. ஹாலிவுட் என்ட்ரி டூ 1500 படங்கள் வரை..ஓமக்குச்சி நாராயணன் படைத்த சாதனைகள்
சென்னை: தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது, கதாநாயகர்கள், கதாநாயகிகள், காமெடி நடிகர்கள் மட்டும்தான். இதுவரை குணச்சித்தர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடவில்லை, அவர்களின் நடிப்பை அங்கீகரிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் காமெடி நடிகர்கள் என்றாலும் நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, சந்தானம் என இன்றைக்கு வரை குறிப்பிட்ட சிலரது திறமையை மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் அங்கீகரித்துள்ளார்கள். அப்படி, ரசிகர்கள் ரசிக்கத் தவறிய காமெடி நடிகர் என்றால் ஓமகுச்சி நாராயணன் தான். அவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் இருந்து சுமார் 10 ஆண்டு காலம் வடிவேலு விலகி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்ட பின்னர், தமிழ் சினிமாவில் காமெடிக்கும் பஞ்சம், காமெடி நடிகர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. என்னதான் சூரி, சந்தானம் போன்றவர்கள் காமெடி நடிகர்களாக இருந்தாலும் இவர்களின் காமெடிகள் பல, உருவக்கேலிகளாகத்தான் இருந்தது.

தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம், பல நடிகர்களை அடையாளம் காணத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக இணையம் வளர்ந்த பின்னர், அன்றைக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் அங்கீகரிக்கத் தவறிய பல நடிகர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை அங்கீகரித்து வருகின்றனர். அந்த வகையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் குறித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு உண்மைகள் வேகமாக பரவி வருகின்றது.
ஓமக்குச்சி நாராயணன்: அதாவது ஓமக்குச்சி நரசிம்மன், சூரியன் படத்தில் கவுண்டமணிக்கு தொடர்ந்து டார்சார் கொடுக்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார். அவரைப் பார்த்து நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என கூறும் காட்சிகள் எல்லாம் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் காமெடிக் காட்சிகளாக உள்ளது.

1500 படங்கள்: ஓமக்குச்சி நரசிம்மனைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் இருந்து தனது திரைவாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 14 மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சுமார் 1,500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 1953ஆம் ஆண்டு வெளியான ஔவையார் என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஹாலிவுட்: எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றி வந்த ஓமகுச்சி நாராயணனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர்தான் சினிமாவில் நடிக்கும் ஆசையை தனக்குள் தீவிரப்படுத்திக் கொண்டுள்ளார். பல மொழிப்படங்களில் நடித்த இவர், கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான இந்தியன் சம்மர் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக இவர் அமெரிக்கா சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு வயது மூப்பினால் இவர் காலமானார். ஆனால் இவரது புகழ், இவரது சாதனைகள் குறித்து இணையம் நன்கு வளர்ந்த பின்னர்தான் வெளியே தெரியவந்துள்ளது. தென்னிந்திய நடிகர்களில் அதிக படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஓமக்குச்சி நாராயணன்.



Click it and Unblock the Notifications











