இங்கே பாரு பங்கு... கடைசியில சூரியும் ஹீரோ ஆயிட்டாரே!

சென்னை: காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் காலம் போல. அந்தக்கால நாகேஷ் தொடங்கி கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு வரிசையில் இப்போ நம்ம பரோட்டா சூரியும் சேர்ந்துவிட்டார். இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்கப்போகும் படத்தில் சூரி ஹீரோ அ(ரி)வதாரம் எடுக்கப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவுல காமெடியில் கலக்கும் நடிகர்களுக்கு நம்மளும் ஹீரோவா ஆகணும்னு மனசோட ஓரத்துல கொஞ்சமாவது ஆசை இருக்கும். அதுலயும் ஒரு படம் நல்லா ஓடுனா உங்களாலதான் அந்தப் படம் ஓடிச்சுன்னு சொல்லி அவரோட அடிப்பொடிகள் சேர்ந்து ஏத்திவிடுவாங்க.

Comedy Actor Parotta Soori becoming Hero in Vetrimaran’s Film

அடிப்பொடிகள் சொல்றத கேட்டு காமெடி நடிகர்களும், ஹீரோவா அவதாரம் எடுப்பாங்க. அப்படி ஹீரோவா நடிச்ச படம் நல்லா ஓடி தயாரிப்பாளர்களுக்கு கல்லா கட்டுனா தொடர்ந்து ஹீரோவா தான் நடிப்பேன்னு சொல்லி அடம் பிடிப்பாங்க. இல்லாங்காட்டி, யூ டர்ன் போட்டு திரும்பவும் காமெடி ரோலுக்கு தயாராகிடுவாங்க.

இப்படி காமெடியில கலக்கி பின்னாடி ஹீரோவா ஆனவங்களோட லிஸ்டுல இப்ப நம்ம பரோட்டா சூரியும் சேர்ந்துட்டாரு. தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுத்திட்டு இருக்குற நம்ம இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படத்தை தொடர்ந்து இயக்கும் படத்தில் காமெடி நடிகர் பரோட்டா சூரி ஹீரோவா நடிக்கப் போறதா தகவல் வெளியாகி இருக்கு.

வெக்கை, நாவலை மையமா வச்சு அசுரன் படத்தை இயக்கி வர்றார் வெற்றிமாறன். இந்தப் படத்துல தனுஷ், மஞ்சு வாரியார், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, பசுபதி உள்ளிட்ட பல பேர் நடிச்சிருக்காங்க. கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிச்சிருக்கார்.

Comedy Actor Parotta Soori becoming Hero in Vetrimaran’s Film

தெக்கத்தி பூமியான கோவில்பட்டியை சுத்தி நடந்து வந்த இந்தப் படத்தோட படப்பிடிப்பு இப்போ இறுதிக் கட்டத்தை நெருங்கிருச்சி. அதுக்கள்ளே வெற்றிமாறன் தன்னோட அடுத்த படத்துக்கு தயாராகிட்டாரு.இதில் ஹீரோவா நடிக்க நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி ஒப்பந்தமாகியுள்ளார். சீமராஜா படத்துல நடிக்குறப்போ நடிகர் சூரி சிக்ஸ் பேக் வச்ச ஃபோட்டோ பேப்பர்ல வந்தப்பவே, ஓஹோ சூரியும் ஹீரோவா நடிக்கப் போறார்னு சந்தேகம் வந்துச்சி. இப்போ அந்த சந்தேகம் மெய்யாலுமே உண்மையாகிடுச்சி.

ஆனா, நடுவுல வடசென்னை 2 படம் நிச்சயமா வெளியாகும்னு நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். அசுரன் படத்தை அடுத்து வடசென்னை 2 தான் வெற்றிமாறன் கையில எடுப்பார்னு தனுஷ் ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்திருந்த நிலமையில, சூரி ஹீரோவா நடிக்கிற படம் பத்தின அறிவிப்பு வந்திருக்கிறது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியா இருக்கு.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகர்கள் ஹீரோவாவது ஒன்றும் புதிதல்ல. நாகேஷ், சந்திர பாபு, விவேக், வடிவேலு, அப்புக் குட்டி, சந்தானம், யோகி பாபு என்று பலரை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பது தான் கேள்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X