வாழ்க்கையை வெறுத்து விட்டேன்.. சாமியாராக போகிறேன்.. நொந்து போன பவர் ஸ்டார்!
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் வாழ்க்கையை வெறுத்துவிட்டேன், சாமியாராக வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறியுள்ளார்.
அக்கு பஞ்சர் மருத்துவரான நடிகர் பவர் ஸ்டார் நடிக்க வருவதற்கு முன் சென்னை அண்ணாநகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார்.
இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், லத்திகா என்ற படத்தை தானே தயாரித்து அதில் நடித்து நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் பவர்ஸ்டார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகர் பவர் ஸ்டார்
லத்திகா படத்திற்கு பிறகு பவர் ஸ்டார் என்ற பெயர் அப்படியே பட்டப் பெயராக மாறி போனது. இவர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்திருந்தார். நகைச்சுவைத் திரைப்படமான அப்படம் பவர் ஸ்டாருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக்கப் டிராப் படத்தில்
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பவர் ஸ்டார், பிக்கப் டிராப் படத்தில் நான் ஹீரோவாக நடித்து வருகிறேன் இப்படத்தில், வனிதா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக எடுத்த புகைப்படத்தில் நானும், வனிதாவும் கல்யாணம் செய்து கொண்டது போல் இருந்த போட்டோவை மிகப்பெரிய அளவில் வைரலாகி விட்டது. காலையில் வீட்டு வாசலில் பலர் மைக்கும் கையுமாக நின்று கொண்டு கேள்வி கேட்டார்கள். இது பிக்கப் டிராப் படத்திற்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியாகி விட்டது. அனைவரும் படம் எப்போது வரும் என்று கேட்டு வருகின்றனர் என்றார்.

சூப்பரும், பவரும் இணைந்தால்
இதுவரை 100 படங்களில் நடித்து இருக்கிறேன் என்னுடையே மிகப்பெரிய ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் சின்ன காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான். சூப்பரும், பவரும் இணைந்து விட்டால் போதும், அதை காலம் முழுவதும் நினைத்து பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றார்.

வாழ்க்கையை வெறுத்துவிட்டேன்
தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார், இப்போது நான் இப்போது என் மனதில் நினைத்துக்கொண்டு இருப்பது ஆன்மீகத்தில் ஈடுபட்டு, மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தான். வாழ்க்கையை வெறுத்துவிட்டேன், மனிதர்களை பார்த்தாலே வெறுப்பா இருக்கு எல்லாருமே போலியாக இருக்காங்க இதனால், சாமியாராக வேண்டும் என்று நினைக்கிறேன். பணம் இருந்த போது என்னுடன் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் பணம் சென்ற பின்னர் யாருமே என்னுடன் இல்லை என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு மனம் திறந்து பல விஷயங்களை பேசினார்.


Click it and Unblock the Notifications