காமெடி நடிகரின் மகள் மறைவு.. எல்லோரையும் சிரிக்க வைத்த மனுஷனுக்கு நடந்த துயரம்..சோகத்தில் திரையுலகம்

சென்னை: தெலுங்கு சினிமா உலகில் மிகவும் முக்கியமான மற்றும் மூத்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ராஜேந்திர பிரசாந்த். இவர் தனது சினிமா வாழ்க்கையை தெலுங்கில் தொடங்கியதில் இருந்து இப்போது வரை டாப் காமெடி நடிகராக உள்ளார். ஒரு காலகட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு இவர் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் இவரது மகள் காயத்ரி (வயது 38) மாரடைப்பால் இறந்த செய்தி திரையுலகினரை மட்டும் இல்லாமல் அவர்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று அதாவது அக்டோபர் 4ஆம் தேதி நள்ளிரவில் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை, அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காயத்ரிக்கு நெஞ்சு வலி வந்ததையும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் ராஜேந்திர பிரசாத்துக்கு நேற்று இரவே உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விஷயம் காதுக்கு வந்ததும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து உடனே மருத்துவமனைக்கு நள்ளிரவிலேயே கிளம்பிச் சென்றுள்ளார்.

rajendra prasad rajendra prasad daughter rajendra prasad daughter death

கண்ணீர்: ஆனால் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னரே, அவரது மகள் காயத்ரி சிகிச்சை பலன் இன்றி, இன்று காலையில் உயிரிழந்தார். இந்தத் தகவல் ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் அழ்த்தியுள்ளது. மகளின் பிரேத உடலைப் பார்த்த நடிகர் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையிலேயே கதறி கதறி அழுதுள்ளார். தனது நடிப்பால் ஒட்டுமொத்த தெலுங்கு மக்களையும் சிரிக்க வைத்த ராஜேந்திர பிரசாத் தனது மகளை இழந்து அழுதைப் பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றுள்ளனர்.

காயத்ரி திருமணம்: மறைந்த காயத்ரி காதல் திருமணம் செய்து கொண்டவர். இவரது காதல் மற்றும் காதல் திருமணத்தில் ராஜேந்திர பிரசாத்திற்கு தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. அதன் பின்னர் மனம் மாறி, தனது மகளை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அவரது மகள் இறந்தது அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

rajendra prasad rajendra prasad daughter rajendra prasad daughter death

ஜூனியர் என்.டி.ஆர்: இவரது மகள் மறைவையொட்டி, நடிகர் ஜூனியர் என்.டி. ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், " எனக்கு மிகவும் பிடித்த ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி மரணம் அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது ஆத்மா சந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பலரும் ராஜேந்திர பிரசாத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X