கடைசியா முகத்தக்கூட பார்க்க முடியல: ஹாஸ்பிட்டல அனுமதிக்கல.. கண் கலங்கி குரல் தழுதழுத்த நடிகர் ராமர்!

சென்னை: தன்னுடைய பார்ட்னரான வடிவேல் பாலாஜி இல்லை என்பதை தன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என கலங்கியுள்ளார் நடிகர் ராமர்.

Recommended Video

ஏன் வடிவேல் பாலாஜிக்கு இந்த கொடூர சாவு, கலங்கிய நடிகர் ரோபா சங்கர்

பிரபல சின்னத்திரை நடிகர் ராமர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இவர் இல்லாமல் இருக்காது.

ராமரும் வடிவேல் பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தாண்டி இவர்களின் நட்பு நீண்டது.

முடக்குவாதத்தால் 15 நாளாக வடிவேல் பாலாஜி அவதி.. யாரேனும் உதவியிருக்கலாமே!.. ரசிகர்கள் கண்ணீர்

அவருக்காகவே..

அவருக்காகவே..

ராமர் மற்றும் வடிவேல் பாலாஜிக்காகவே அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சாப் போச்சு பகுதியை காண காத்திருப்பார்கள் ரசிகர்கள். அவர்கள் போர்ஷன் முடிந்ததும் பல வீடுகளில் சேனல் மாறிவிடும். ராமரும் பாலாஜியும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.

அதிர்ச்சியும் வேதனையும்

அதிர்ச்சியும் வேதனையும்

இருவரும் சேர்ந்து வெளிநாடுகளிலும் பல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் ராமர் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

13 வருஷமா..

13 வருஷமா..

வடிவேல் பாலாஜி இறந்துட்டாருங்றது ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு. அவர் இல்லைங்றது நம்பவே முடியல.. நான் இப்போ மதுரையில இருக்கேன். என்ன சொல்றதுன்னே தெரியல. நானும் வடிவேல் பாலாஜியும் 13 வருஷமா ஒன்னா ட்ராவல் பண்றோம்.

முகத்த கூட பார்க்க முடியல

முகத்த கூட பார்க்க முடியல

ரொம்ப சப்போர்ட்டா இருப்பார். கடைசியா என்னோட மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில கூட 2 எபிசோட் கலந்துக்கிட்டாரு. அப்பவே உடம்பு முடியாமதான் இருந்தாரு. நேரில் அவர் முகத்த கூட கடைசியா பார்க்க முடியல.

குரல் தழுதழுத்து..

குரல் தழுதழுத்து..

மருத்துவமனைக்கு போனோம், ஆனா அவங்க அவர பார்க்க அனுமதிக்கல. வடிவேல் பாலாஜியோட இறப்பு விஜய் டிவிக்கு பெரிய இழப்பு.. சிரிச்சா போச்சுல்லாம் அவருதான்.. என்ன சொல்றதுன்னு தெரியல.. இவ்வாறு குரல் தழுதழுத்து, அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பேசினார் ராமர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X