சினிமா மீது ஈடுபாடு இல்லை..நெல்சன் என்னை வற்புறுத்தினார்..ரெடின் கிங்ஸ்லி பேட்டி!

சென்னை : பிரபல காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லி சினிமா மீது தனக்கு ஈடுபாடு இல்லை நெல்சனால் தான் நடிக்க வந்தேன் என கூறியுள்ளார்.

இயல்பாக பேசுவது, உடல் மொழி என தனக்கென தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டார் ரெடின் கிங்ஸ்லி.

ஏஜென்ட் கண்ணாயிரம்,பத்து தல, வாஸ்கோடகாமா, நாய் சேகர் ரிட்டன்ஸ் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரெடின் கிங்ஸ்லி.

ரெடின் கிங்ஸ்லி.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் டாக்டர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. 100 கோடி வசூல் சாதனையை படைத்தது. அப்படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர் படத்தில் அவரது முக பாவனைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்தார். ஏற்கெனவே கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும் டாக்டர் படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் மீம்களாக வலம் வருகின்றன. டாக்டர் படத்திற்கு பிறகு ரெடின் கிங்ஸ்லிற்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உருவானது.

படம் நிறுத்தப்பட்டது

படம் நிறுத்தப்பட்டது

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ரெடின் கிங்ஸ்லி, நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருந்த வேட்டை மன்னன் படத்தில் பிரதான காமெடியனாக நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால், அந்த படம் நிறுத்தப்பட்டதால் என்னுடைய பழைய வேலைக்குத் திரும்பிச் சென்றுவிட்டேன். ஒவ்வொரு வருடமும் நெல்சன் என்னைத் தொலைபேசியில் அழைத்து அவருடைய படத்துக்காக என்னுடைய சமீபத்திய புகைப்படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்பார்.

நெல்சன் வற்புறுத்தினார்

நெல்சன் வற்புறுத்தினார்

எனக்கு சினிமா மீது ஈடுபாடு இல்லை எப்படியோ எனக்குள் ஒரு நடிகர் இருப்பதை நெல்சன் தெரிந்து கொண்டு என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார். அதனால் தான் நடிக்க வந்தேன் என ரெடின் கிங்ஸ்லி கூறினார்.மேலும், உங்களுக்கும் நெல்சனுக்கும் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் தான் பிகில் பட டீசரில் உங்களை ஒரு காட்சியில் கூட காட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ரெடின் கிங்ஸ்லி, நெல்சன் வேண்டும் என்றே டீசரில் பயன்படுத்தாமல் இல்லை என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X