என் பாய்பிரண்ட் ரொம்ப பாசமான மனுஷன்.. ரெடின் கிங்ஸ்லிக்கு மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா தனது கணவர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி. இவர், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் பெரிதும் கவனிக்கப்படும் நடிகரானார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ரெடின் கிங்ஸ்லி வசனங்கள், நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி: தமிழில் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ள நடிகர் ரெடின் கிங்ஸ்லி, விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி என பல டாப் நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். ஏராளமான படங்களை கையில் வைத்து இருக்கும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
எளிமையான திருமணம்: சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரெடின் கிங்ஸ்லிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சங்கீதா ஒரு சில தொலைகாட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரை, சமூக வலைதளங்களில் இவரை பலர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
நடிகை சங்கீதா பேட்டி: இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லின் மனைவியும் நடிகையுமான சங்கீதா அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், செய்தியாளர் பாய்பிரண்ட் பற்றி கேள்வி கேட்க, வெட்கத்துடன் பதில் அளித்த சங்கீதா, அவர் அமைதியானவர், அதே நேரம் ரொம்ப பாசமானவர். அவர் முன் குழந்தை மாதிரி மாறிவிடுவேன். என்னை கண்ட்ரோல் பண்ணி பார்த்துக்கொள்வதுதான் அவர் வேலை என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் சங்கீதா பாய் பிரண்டுனு சொன்னது ரெடின் கிங்ஸ்லியைத்தானே என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











