Robo Shankar: மறைந்தார் ரோபோ சங்கர்.. துக்கத்தின் உச்சத்தில் குடும்பம்.. ஐயோ இனி அவர் வரவே மாட்டாரா?

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கு வயது, 46. உடல்நலக் குறைவால் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 9:05 மணியளவில் உயிரிழந்தார். நேற்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலையே உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவால், உடனடியாக ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். இப்படி இருக்கையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காததால், அவர் உயிரிழந்தார். அவரது மறைவு அவரது ரசிகர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்தவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Comedy Actor Robo Shankar Died At Hospital His 46 Age Fans And Family Getting Sad

இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தார். மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டபோது, அவருக்கு பக்கபலமாக இருந்தவர் பத்திரிகையாளர் நக்கீரன் கோபல் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு வந்த பின்னர் அவரது வாழ்க்கை முறையே மொத்தமாக மாறிப்போனது. அவரது குடும்பம் அவரைப் பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்டது.

தனது உடல்நிலை காரணமாகவே பல பட வாய்ப்புகளை அவர் தவிர்த்து வந்தார். இப்படி இருக்கும்போது, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை. அதன் பின்னர் ரோபோ சங்கர் உடல் மெலிந்த நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிய ரோபோ சங்கர் அவ்வப்போது பெரிய ஸ்டார்களின் படங்களுக்கும் ரீ ரிலீஸ்களுக்கும் சென்று அலப்பறை செய்து வந்தார். அதுவும் குடும்பத்துடன் சென்று அலப்பறை செய்பவர். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், அவரது இந்தியன் படத்தின் ரீரிலீஸின் போதும் மொத்த குடும்பத்தையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் மேள தாளத்துடன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர் கூட தனது மனைவி பிரியாவுடன் படப்பிடிப்புத் தளத்தில் ரீல்ஸ் வீடியோ செய்து பகிர்ந்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இப்படி இருக்கையில் நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்புத் தளத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பொது வார்டில் இருந்து, ஐசியூ-வுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி இரவு 9.05 மணி அளவில் உயிரிழந்தார். இவரது மறைவால் மொத்த திரையுலகமும், சின்னத்திரை உலகமும் ரசிகர்களும், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X