ஹன்சிகா காலை தடவ விடல.. மேடையில் அநாகரீகமாக பேசிய ரோபோ சங்கர்..கொந்தளித்த பத்திரிக்கையாளர்
சென்னை: ஹான்சிகா மோத்வானி நடித்த பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரோபோ சங்கர், ஹன்சிகா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பாட்னர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர், ஜான் விஜய் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கி உள்ளார். இப்படம் இம்மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு: பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, ரோபோ சங்கர் நடிகை ஹன்சிகா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், ஹன்சிகா மோத்வானி உண்மையிலேயே ஒரு மெழுகு பொம்மை. மைதா மாவை உருட்டி செவத்துல அடிச்சா ஒட்டிக்கொள்ளும், அந்த மாதிரி தான் அவங்க இருப்பாங்க என்றார்.
முடியாவே முடியாது: மேலும், படத்தில் நான் ஹான்சிகாவின் காலை முட்டிக்கு கீழ் தடவுவது போல ஒரு சீன். ஆனால், அந்த காட்சிக்கு ஹான்சிகா ஒத்துக்கொள்ளவே இல்லை. நானும் இயக்குநரும் காலில் விழுந்துக்கூட கெஞ்சினோம், கட்டவிரலையாவது தடவிக்கிறேன்னு கேட்டோம், ஆன முடியவே முடியாது. ஹீரோ ஆதி மட்டும் தான் என்னை தொட்டு நடிக்கனும், வேற யாரும் தொடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நினைச்சேன்.. ஹீரோ ஹீரோ தான், காமெடியன் ஓரமா தான் என்று பேசி இருந்தார்.
டென்ஷனான பத்திரிக்கையாளர்: ரோபோ சங்கரின் இந்த பேச்சால் கடுப்பான ஒரு பத்திரிக்கையாளர், ரோபோ சங்கர் சபை நாகரீகமே இல்லாமல், ஹான்சிகா மோத்வானியின் காதலை தடவ வேண்டும் என்று, இத்தனை பேர் முன்னிலையில் பேசி இருக்கிறார். இதுபோன்ற நடிகரால் தான் சமூகவலைத்தளத்தில் நடிகை பற்றி தவறாக பேசப்படுகிறது. தயவு செய்து இதுபோன்று அநாகரீகமான நபரை மேடையில் பேச அனுமதிக்காதீர்கள். ஒவ்வொருவரின் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும் என்று பத்திரிக்கையாளர் கூறினார்.
மன்னிப்பு கேட்ட நடிகர்: இதனால், டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறிது நேரம் சலப்பு ஏற்பட்டது. அப்போது ரோபோ சங்கர் அங்கு இல்லாததால், மேடையில் இருந்த ஜான் விஜய், ரோபோ சங்கர் பேசியதற்கு படக்குழுவின் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் படத்தின் ஒரு காட்சியை பற்றி பேசுவதாக நினைத்து தவறாக பேசிவிட்டார் என்றார். விழாவில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











