சீர் வரிசையுடன் நடந்த வளைகாப்பு.. தாத்தாவாகும் ரோபோ ஷங்கர்.. பூரிப்பில் இந்திரஜா!
சென்னை: ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதத்திற்கு முன் அறிவித்து இருந்தார். தற்போது அவருக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த போட்டோக்களை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நகைச்சுவையில் கலக்கி வரும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பிகில்’ படத்தில் கால் பந்து வீராங்கனை பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டினார்கள். அந்த படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் வெளிவந்த கார்த்திக், அதிதி ஷங்கர் நடித்த 'விருமன்’ படத்தில் அதிதியின் தோழியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் தென்படாத இவர் இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதையடுத்து,கடந்த ஆண்டு முறைமாமன் கார்த்திக் என்பவருடன் காதலித்து வருவதாக அறிவித்து காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி, ஹல்தி என படு கோலாகலமாக நடைபெற்றது. அம்பானி வீட்டு திருமணம் போல, ரோபோ ஷங்கர் மகள் திருமணம் நடந்தது என்று சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்தனர்.
அப்பா அம்மா ஆக போறோம்: இதையடுத்து, இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியிலேயே இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவருமே அப்பா -அம்மா ஆகப் போகிறோம். இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தோஷமான செய்தியை சொல்லி இருந்தார்.

5ம் மாத வளைகாப்பு: இந்நிலையில், இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் வளைகாப்பு போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இதில், புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்... 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என பதிவிட்டுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நெருங்கி உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பல ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





Click it and Unblock the Notifications