Indraja Shankar: கோலாகலமாக நடந்த ரோபோ சங்கரின் மகள் வளைகாப்பு விழா.. அசத்தலான விருந்து!
சென்னை: ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்திரஜாவிற்கு நலங்கு வைத்து அவரை வாழ்த்தி சென்றனர். அந்த வளைகாப்பு போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர். தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார். அவரின் மகள் இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக் நடித்த 'பிகில்' படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்திருந்தார்.முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பலருமே பாராட்டினார்கள். அந்த படத்தில் இவரின் பாண்டியம்மாள் ரோல் பேசப்பட்டதை தொடர்ந்து, 'விருமன்' படத்தில் அதிதியின் தோழியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமாவிற்கு வராத இந்திரஜா, இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து அப்பா, அம்மாவுடன் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு முறைமாமன் கார்த்தியை காதலித்து வருவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, இந்திரஜா- கார்த்திக் திருமணம்,சங்கீத், மெஹந்தி, ஹல்தி என படு கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்த்த பலர் அம்பானி வீட்டு திருமணம் போல, ரோபோ ஷங்கர் மகள் திருமணம் நடந்தது என்று இணையத்தில் ட்ரோல் செய்யும் அளவுக்கு இவர்களின் திருமணம் நடந்தது.

: திருமணத்திற்கு பின் இந்திரஜா தனது கணவருடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடி வந்தனர். அந்த நிகழ்ச்சியிலேயே இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் அப்பா -அம்மா ஆகப் போகிறோம் என்றும் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து அனைவரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வளைகாப்பு: இந்நிலையில், இந்திரஜாவுற்கு இன்று கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது. இந்த வளைகாப்பில் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு, இந்திரஜவிற்கு நலங்கு வைத்து வாழ்த்தி உள்ளனர். மேலும், திருமணத்தில் எப்படி வகை வகையான உணவு பரிமாறப்பட்டதோ அதே போல, வளைகாப்பிலும் புளி சாதம், தயிர் சாதம், மாங்காய் சாதம், தேங்காய் சாதம், லெமன் சாதம் சம்பிரதாயத்திற்கு வைக்கப்பட்டு வகை வகையான கூட்டு பொறியலுடன் உணவு பரிமாறப்பட்டது. தற்போது இந்திரஜாவின் வளைகாப்பு போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது-



Click it and Unblock the Notifications