எல்லாம் நல்ல விஷயம் தான்..ரோபோ சங்கரை தாத்தா ஆக்கிய இந்திரஜா.. குவியும் வாழ்த்து!
சென்னை: தமிழ் சினிமா பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார் ரோபோ ஷங்கர். மேடையில் மிமிக்ரி செய்து அசத்தி வந்த ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளை செய்து தன்னை பட்டை தீட்டிக்கொண்டு தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும், தனி உடல்மொழியாலும் இன்று தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரின் மகள் இந்திரஜா கர்ப்பமான மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
காமெடி ரோலில் கலக்கி வந்த நடிகர் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா ஒரு நடன கலைஞர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் தான் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பிகில்' கால் பந்து வீராங்கனையா பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டினார்கள்.

ரோபோ ஷங்கரின் மகள்: அந்த படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் வெளிவந்த கார்த்திக், அதிதி ஷங்கர் நடித்த 'விருமன்' படத்தில் அதிதியின் தோழியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் படத்தில் நடிக்கவில்லை என்றால், இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதையடுத்து, சில கடந்த சில மாதத்துக்கு முன் முறைமாமன் கார்த்திக் என்பவருடன் காதலித்து வருவதாக அறிவித்து காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

மதுரையில் திருமணம்: இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி, ஹல்தி எனபடு கோலாகலமாக நடைபெற்றது. அம்பானி வீட்டு திருமணம் போல, ரோபோ ஷங்கர் மகள் திருமணம் நடந்தது என்று சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யும் அளவிற்கு இவர்களின் திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணத்திற்கு பின் இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.
குட் நியூஸ்: இந்நிலையில் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் தகவலை, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கார்த்திக் அறிவித்துள்ளார். அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் நடுவர் ராதா, எப்போது எங்களுக்கு மகிழ்ச்சி செய்தியை சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.

இந்திரஜா கணவர் கார்த்திக், நாங்கள் இருவருமே அப்பா -அம்மா ஆகப் போகிறோம். இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தோஷமான செய்தியை சொல்லி இருக்கிறார். இதற்கு, நான் தான் இங்கு இருப்பதிலேயே ரொம்ப யங் தாத்தா என்று சந்தோஷத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து அனைவரும் கர்ப்பமாக இருக்கும் இந்திரஜாவிற்கு நலங்கு வைத்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











