நிற்க கூட முடியலனு யாரு சொன்னா.. செம ஆட்டம் போட்ட ரோபோ ஷங்கர்.. அப்போ அவர் சொன்னதெல்லாம் பொய்யா?

சென்னை : நடிகர் ரோபோ சங்கர் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலைமையில் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்த நிலையில், இன்ஸ்டாவில் செம ஆட்டம் போட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு திடீரென மாறினார்

இவரின் இந்த நிலைமையைப் பார்த்து அவரது ரசிகர்கள் பதறிப்போனார்கள்

Comedy actor Robo Shankars mass dance video trending on social media

ரோபோ சங்கர் : இதையடுத்து அவரது மனைவி, அவர் நலமாக தான் இருக்கிறார். ஒரு படத்திற்காகத்தான் அவர் உடல் எடை குறைந்துக்கொண்டதாகவும், இதனால், ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவரது கூறியிருந்தார். ஆனால், அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்துள்ளது.

பயில்வான் ரங்கநாதன் : மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ரோபோ சங்கரை மிமிக்ரி நடிகராக இருக்கும்போதே எனக்கு நன்றாக தெரியும், அவர் வொர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொண்டார். ஆனால், அவர் பிரபலமானதற்கு பின் மதுவுக்கு அடிமையாகி விட்டார்.

நிற்கக்கூட முடியவில்லை : மது அருந்தாமல் அவருக்கு தூக்கமே வராது என்ற நிலைக்கு மாறிவிட்டார். அவர் இந்த நிலைக்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் மதுப்பழக்கத்தால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை தான். இப்போது அவரால் நிற்கக்கூட முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

Comedy actor Robo Shankars mass dance video trending on social media

எல்லாமே பொய்யா : இதையடுத்து, ரோபோ சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மனுஷன் அப்படியே தான் இருக்கிறார். அதற்குள் அவரால் நிற்கக்கூட முடியவில்லை என்று வெளியான தகவல் எல்லாமே பொய்யா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், பயில்வானின் தீவிர நலம்விரும்பிகள் வா தலைவா வா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X