Robo Shankar: என் சாதிக்காரன் படம்.. மார்தட்டிச் சொல்லும் ரோபோ சங்கர்.. எந்த சாதியை சொல்றாரு?
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் குடும்பமே செலிபிரிட்டி குடும்பம் தான். இவர்களது குடும்ப உறுப்பினர்கள் செய்வதை கவனிக்க தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி இருக்கும்போது ரோபோ சங்கர் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படமான சொட்ட சொட்ட நனையுது படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில் படத்தை எடுத்தவர் தனது சாதிக்காரர் என பேசினார். இவரது பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அறிமுக இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷினி, ஷாலினி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில், உருவாகியுள்ள படம் சொட்ட சொட்ட நனையுது. நிஷாந்த் ரூசோ, பிக்பாஸ் வர்ஷினி, அறிமுக நடிகை ஷாலினி இணைந்து நடித்துள்ளனர். காமெடியாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, 'கலக்கப் போவது யாரு' புகழ் ராஜா கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

18 நாளில்: படத்தின் கதை இளம் வயதிலேயே முடி கொட்டிய இளைஞர் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் என்னென்ன என்பதுதான். இந்த கதையை மிகவும் நகைச்சுவையாக உருவாக்கி உள்ளார்கள். படத்தை மொத்தமாகவே 18 நாட்களில் படம் ஆக்கிவிட்டார்கள் எனவும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
சாதிக்காரன்: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், " இந்த படத்தின் இயக்குநர் நவீத் பரீத் குழந்தை போல. சொட்ட சொட்ட நனையுது படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 18 நாட்களில் நாங்கள் முடித்தோம். படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும். இது என் சாதிகாரனின் படம். என்னைப் போன்ற நகைச்சுவை சாதிக்காரனின் படம். கலக்கப்போவது யாரு எபிசோட் பார்த்தால் நீங்கள் எப்படி மனம் விட்டுச் சிரிப்பீர்களோ அதேபோல் இந்த படத்தைப் பார்க்கும் போது நன்றாக சிரிப்பீர்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன். நான் பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தான் அதிகப்பட்டியானோர் நன்றாக கைதட்டி சிரித்து மகிழ்ந்துள்ளீர்கள்" என்று பேசினார்.

டிரெண்ட்: மேலும் ரோபோ சங்கர் பேசுகையில், நடிகர் கமல்ஹாசனைப் போல மிமிக்ரி செய்து பேசி, படக்குழுவினரை வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், இந்த படத்தை எடுத்தவர் என் சாதிக்காரர் என ரோபோ சங்கர் பேசியதை மட்டும் சில இணையவாசிகள் தனியாக கத்தரித்து இணையத்தில் வேகமாக பரப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











