அம்மாவை தாக்கிய நோய்.. மகளுக்கும் அதே பிரச்சனை.. துவண்டு போன பிரியங்கா ரோபோ சங்கரின் கண்ணீர் கதை!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமா செவ்வாய் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ரோபோ சங்கர் அவரது மனைவி பிரியங்கா இருவரும் வாழ்க்கையில் படாத கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்தார்கள். இந்த செய்தியில் பிரியங்கா சந்தித்த அவமானம், வலியை பார்க்கலாம்.

பிரியங்காவின் அம்மா போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அப்படி இருந்த போதும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் டன்சராக இருந்துள்ளார். அம்மா டன்சராக இருந்ததால் பிரியங்காவிற்கும் நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு அவரும் ஸ்டேஜ் டான்சராக மாறினார். அப்போது, தான் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்கா செந்தாமரை உடன் வந்துள்ளார். அதே நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு, ரோபோ போல, செய்து காட்டி கை தட்டலை அள்ளி உள்ளார். அப்போது தான் பிரியங்கா முதன் முதலாக ரோபோ சங்கரை பார்த்துள்ளார்.

Robo shankar Priyanka shankar life story
Photo Credit:

காதல் கதை: ரோபோ ஷங்கரின் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிரியங்காவும் அவரது சகோதரி செந்தாமரையும் நடனமாடி இருக்கிறார்கள். அதை பார்த்த பலரும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்டு கூச்சல் போட்டுள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட ரோபோ சங்கர், பெயிண்ட் பூசி கடுமையாக உழைச்சி ஸ்டெஜ்ஜில் பர்பாம்ஸ் செய்தோம், அதற்கு யாரும் ஒன்ஸ்மோர் கேட்கல, டான்சுக்கு கேக்குறாங்களா என நினைத்துக்கொண்டு, பிரியங்காவின் டான்ஸ் ஐ பார்த்து இருக்கிறார் ரோபோ சங்கர். நிகழ்ச்சியில் முடிந்ததும் இருவருமே ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போதுதான் இருவருடைய மனதிலும் காதல் மலர்ந்துள்ளது.

சாப்பாட்டுக்கே கஷ்டம்: பிரியங்கா குண்டாக இருந்ததால், பலவிதமான அவமானங்களையும், கேலி பேச்சும் ஆளாகி ஒதுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், சங்கர் அதை பார்க்காமல் அவரை மனதார காதலித்து உள்ளார். இதுவே சங்கர் மீது மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முயற்சி எடுத்தபோது குடும்பத்தில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளன. ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி ரோபோ சங்கரும் பிரியங்காவும் 2002இல் வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும் தங்குவதற்கு வீடு இல்லாமல் அக்காவின் வீட்டில் சில மாதங்கள் வாழ்ந்துள்ளனர். இந்திரஜா பிறந்த பிறகு தான் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. ஆனால்,பிரியங்காவை போலவே இந்திரஜாவும் உடல் எடை அதிகரித்து இருந்ததால், அதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் பிரியங்கா.

Robo shankar Priyanka shankar life story
Photo Credit:

தனி அடையாளம்: அதன்பிறகு படிப்படியாக கடுமையாக உழைத்து இன்று, ரோபோ சங்கர் மனைவியாக மட்டுமில்லாமல் தனக்கு என்று ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார் பிரியங்கா. ஒரு சில படங்களில் நடித்து இவர், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட பாலோவர்களை வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இவர்கள், தனது ஒரே மகளான இந்திரஜாவின் திருமணத்தை திரைத்துறையை வியந்து பார்க்கும் அளவிற்கு நடத்தினார்கள். திருமணத்தின் போது பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன, அதே போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட போதும், குடித்து குடித்து இப்படி ஆகிவிட்டார். இதற்கு மேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்றெல்லாம் பேச்சு எழுந்த போதும், நான்கு மாதம் போராடி தனது கணவரை மீட்டு மீண்டும் பழைய ரோபோ சங்கராக மாற்றினார்.

தொடரும் விமர்சனம்: ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரின் மருமகன் கார்த்திக் ஈமச்சடங்குகளை செய்து முடித்தார். கணவரின் இறுதி ஊர்வலத்தில் பிரியங்கா நடனம் ஆடியது பேசு பொருளாகி, பலரும் பிரியங்காவை விமர்சனம் செய்து வருகின்றனர். பிறந்ததில் இருந்து தற்போது வரை பல விமர்சனங்களை சந்தித்து வந்த பிரியங்கா, இதையும் எளிதாக கடந்து, இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வருவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X