காமெடி நடிகர் கார் சாலைத்தடுப்பில் மோதி விபத்து...பைக்கில் வந்த இளைஞர் காயம்...போலீஸ் வலைவீச்சு

சென்னை: பட்டினப்பாக்கத்தில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் சாலை தடுப்பில் மோதியது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இளைஞர் கார் மோதி காயம் அடைந்தார். காரை ஓட்டி வந்த காமெடி நடிகர் பின்னர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவர் எங்கே என்று போலீசார் தேடி வருகின்றனர்.

சிறையில் அடைப்பட்ட வாகன ஓட்டுநர்

சிறையில் அடைப்பட்ட வாகன ஓட்டுநர்

சென்னையில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுவது சகஜமான ஒன்றாகி வருகிறது. போலீசார் அங்காங்கே சாலைத் தடுப்புகளை வைத்து மது போதையில் கார் ஓட்டி வருபவர்களை கண்காணித்தாலும் அதையும் மீறி மது அருந்தி காரை ஓட்டிச் செல்பவர்கள் விபத்தினை ஏற்படுத்துகிறார்கள். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் மது போதையில் காரை ஓட்டி திருவான்மியூர் அருகே ஒரு பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலியானார். தப்பி ஓடிய அவர் கைது செய்யப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்து ஓட்டுநர்கள்

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்து ஓட்டுநர்கள்

வாகனங்கள் விபத்தில் சிக்குவது, விபத்தில் சிக்குபவர்கள் உயிரிழப்பது எதிர்பாராத ஒன்று. வாகனத்தை ஓட்டுபவர்கள் கவனமாக ஓட்ட வேண்டும். விபத்தில்லாமல் ஓட்ட வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. சாலை விதிகளை மதித்து மிதமான வேகத்தில் சென்றால் விபத்து நேர்வது குறையும். ஆனால் வேகமாக செல்வது, மதுபோதையில் நிதானமின்றி காரை செலுத்துவது போன்ற காரணங்களால் விபத்து ஏற்படும்போது சாலையில் செல்லும் அப்பாவிகள் காயம் அடைவது அல்லது உயிரிழக்க நேரிடுகிறது.

விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற காமெடி நடிகர்

விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற காமெடி நடிகர்

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் பெரும் துயரத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது. மது போதையில் வாகனங்களை ஓட்டி சிக்கிய திரைப் பிரபலங்கள் பலருண்டு. அந்த வரிசையில் நேற்று முன் தினம் மாலை அதிவேகமாக காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திவிட்டு காணாமல் போன காமெடி நடிகர் கணேஷை போலீஸார் தேடி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு அதனால் காயமடைந்த இளைஞர் பற்றி கவலைப்படாமல் அந்த இடத்திலிருந்து கணேஷ் மாயமானதாக கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரம், நகைச்சுவை நடிகை ஆர்த்தி

குழந்தை நட்சத்திரம், நகைச்சுவை நடிகை ஆர்த்தி

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சினிமா, சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆர்த்தி. விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், மற்றும் சின்னத்திரையில் நிறைய காமெடி நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும், நடுவராகவும் செயல்படுகிறார் ஆர்த்தி. இவர் அதிமுகவில் பேச்சாளராகவும் இருந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமானவர்.

காமெடி நடிகர் கணேஷ்

காமெடி நடிகர் கணேஷ்

இவரது கணவர் கணேஷ். சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். ஜோடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், தொடர்களிலும் நடித்து வருகின்றனர். நடிகர் கணேஷ் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் பட்டினபாக்கம் ஒன்பதாவது பிளாக் எதிரில் உள்ள சாலையில் நடிகர் கணேஷ் தனது காரில் வேகமாக வந்துள்ளார். அப்போது பட்டினப்பாக்கம் ரோட்டில் உள்ள சாலை தடுப்பின் மீது வேகமாக சென்ற கார் மோதியது.

காயமடைந்த இளைஞர், நழுவிய கணேஷ்

காயமடைந்த இளைஞர், நழுவிய கணேஷ்

மோதிய வேகத்தில் கார் வட்டமடித்து நின்றுள்ளது. அப்போது அவருக்குப் பின்புறம் சாலையில் வந்து கொண்டிருந்த இளைஞர் காரின் மீது மோதி காயமடைந்துள்ளார். காரில் வந்த நடிகர் கணேஷ் மற்றும் உடன் வந்தவர்கள் இளைஞரைப்பற்றி கவலைப்படாமல் அங்கிருந்து நழுவியுள்ளனர். விபத்து குறித்து அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் போன் செய்து வரவழைத்துள்ளனர்.

எங்கிருக்கிறார் கணேஷ்...தேடும் போலீஸ்

எங்கிருக்கிறார் கணேஷ்...தேடும் போலீஸ்

இதையடுத்து அங்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த கணேஷ் எங்கு போனார் என தேடிவருகின்றனர். கணேஷ் காயம்பட்டு தேனாம்பேட்டை அப்போலோ சென்றதாக தெரியவந்துள்ள நிலையில் அங்கு சென்றபோது அங்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது கணேஷ் எங்கு இருக்கிறார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.

மதுபோதையில் கார் ஓட்டினாரா?

மதுபோதையில் கார் ஓட்டினாரா?

சென்னையில் பிரபல நடிகர் ஒருவர் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அதனால் இளைஞர் காயம் அடைந்துள்ளது பற்றி கவலைப்படாமல் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரை ஓட்டி வந்த காமெடி நடிகர் கணேஷ் மது போதையில் இருந்து இருக்கலாம் ஆகவே பிரச்சினையை தவிர்க்க தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த விபத்து திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X