வாரிசா..துணிவா..எந்த படம் பாப்பீங்க..கேள்வி கேட்ட நிருபருக்கு வாயில் குத்துவிட்ட சந்தானம்!
சென்னை: நடிகர் சந்தானம் வாரிசு மற்றும் துணிவு படம் குறித்து பேசி இருப்பது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பேசு பொருளாகி உள்ளது.
நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையத்துள்ளார்.

தயாரிப்பாளர் கவுன்சில் முடிவு
பாண்டிகை காலங்களில் அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களே திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளதால், நேரடி தெலுங்கு படத்திற்கு திரையரங்கு ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று 2017ம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

பூதாகரமாகும் பிரச்சனை
இந்நிலையில், வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ஆந்திராவில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு சீமான்,லிங்குசாமி ஆகியோர் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாரிசு பிரச்சனை
இந்நிலையில், நடிகர் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்த பிரச்சனை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சந்தானம், இந்த பிரச்சனையை அவர்கள் தான் பேசி முடிவு செய்வார்கள். நாம் இங்க இருந்து கொண்டு எந்த பிரச்சனைக்கும் முடிவு சொல்ல முடியாது. அது வேறு மாநிலம் வேறு மொழி. மேலும், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு தான் இதனால், அவர் இதற்காக போராடி உரிமையை வாங்குவார் என்றார்.

விஜய்க்கு என் ஆதரவு
மேலும், தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதே போல இங்கிருந்து அங்கு சென்று படம் எடுப்பவர்களுக்கு நாம் நமது ஆதரவைக் கொடுக்க வேண்டும். விஜய் சார் ஒரு படம் பண்ணுகிறார் என்ற போது அதற்கு நாம் ஆதரவு தெரிவிப்போம். அங்கு படம் வெளியாவதற்கு என்ன தேவையோ அதற்கான கருத்து உரிமையை சொல்லுவோம். மேலும், தயாரிப்பாளரே தெலுங்காக இருக்கும் போது அவர் நிச்சயம் பேசி படத்தை வெளியிடுவார் என்றார்.

எந்த படம் பாப்பீங்க
இதையடுத்து, ஒருவர் நிருபர் பொங்கல் அன்று வாரிசு படம் பாப்பீங்களா? இல்லை துணிவா என்றார். இந்த கேள்வியை கேட்டு சிரித்த சந்தானம், நீங்கள் எந்தப் படம் பார்ப்பீர்கள்? எனக் கேள்வி கேட்டார். அதற்கு அந்த நிருபர் இரண்டு படத்தையும் பார்ப்பேன் எனப் பதிலளித்ததும். அவர் செல்லமாக குத்துவிட்டு நீ மட்டும் இரண்டு படத்தையும் பார்ப்ப நான் பார்க்க மாட்டேனா? என்றார். இந்த சம்பவம் அங்கு பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











