Santhanam speech: கிக் படம் 100 வயாகராவுக்கு சமம்… சந்தானம் கலகல பேச்சு!

சென்னை: Santhanam speech(சந்தானம் பேச்சு) கிக் படம் 100 வயாகராவுக்கு சமம் என்று கிக் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சந்தானம் கலகலப்பாக பேசியுள்ளார்.

நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கிக். சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார்.

comedy actress Santhanam speech in Kick Movie Audio Launch

இதில் செந்தில், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், முத்துக்காளை, கிங் காங், கூல் சுரேஷ், ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கிக் செய்தியாளர்கள் சந்திப்பு: கிக் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சந்தானம் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி, இயக்குனர் பேசும் தமிழ் ரொம்ப பிடிக்கும். சென்னை தமிழும், கர்நாடக தமிழும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். எனக்கு அந்த ஸ்லாங் ரொம்ப பிடித்தது. ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிப்பது சாதாரண விஷயமல்ல. எனக்கே இந்த படம் ரொம்ப வித்தியாசமான படமாக தான் இருக்கும்.

ஜாலியான படம்: இந்த படம் வில்லன் ஆக்ஷன் அப்படி இப்படி என்று எதுவுமே இல்லாமல், ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் இருக்கும் ஈகோ தான் இந்த படம். இதுபோன்று வெளியான அனைத்துப்படங்களும் வெற்றி பெற்று இருக்கிறது. அது போல இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும். இதில் தம்பி ராமையா, செந்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் நல்ல ஜாலியான படமாக இப்படம் வந்து இருக்கிறது.

comedy actress Santhanam speech in Kick Movie Audio Launch

அரசியலுக்கு வருவீங்களா: இதையடுத்து செய்தியாளர் ஒருவர், உதயநிதி சினிமாவில் வெற்றிபெற நீங்கள் காரணமாக இருந்தீர்கள். இப்போது அவர் அரசியலுக்கு வந்து விட்டார் நீங்களும் அரசியலுக்கு வரும்ஆசை உள்ளதா என சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இது அன்பான கேள்வியா.. இல்லை ஆப்பு வைக்குற கேள்வியா? இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று கூறினார்.

100 வயாகராவுக்கு சமம்: இந்த படத்தில் காமெடியன்கள் எல்லாரும் இருந்தாலும், இந்த படத்தில் சந்தானத்தை ஹீரோவாக காட்டியுள்ள படம். கிக் படம் 100 வயாகராவுக்கு சமமான விஷயம். ஒரு பாடலில் நிறைய பெண்களுடன் டான்ஸ் ஆடியதால் செந்தில் சார் ரொம்ப சந்தோஷமாக இருந்தாரு என்று கிக் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சந்தானம் கலகலப்பாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X