twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரக்கு + சப்ளையர்.. ஜிஎஸ்டிக்கு புது விளக்கம்.. அருவத்துக்கு ஆப்பு வைக்க பார்க்குறீங்களே சதீஷ்!

    ஜிஎஸ்டி-க்கு புது விளக்கம் தந்துள்ளார் நடிகர் சதீஷ்.

    |

    சென்னை: காமெடி நடிகர் சதீஷ் ஜிஎஸ்டி குறித்து புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்துள்ள படம் அருவம். இப்படத்தை இயக்கியவர் சாய் சேகர். சதீஷ் இதில் காமெடி செய்துள்ளார்.

    படம் வெளியாவதற்கு முன்பிருந்து ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. உணவு கலப்படம் தொடர்பான படம் இது என்பதால், ஸ்னீக் பிக் காட்சிகள் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது.

    4வது ஸ்னீக் பீக்

    4வது ஸ்னீக் பீக்

    இந்நிலையில் அருவம் படத்தின் ஸ்னீக் பீக் நான்காவது ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் காமெடியன் சதீஷ் கட்டிங் போடுவதற்காக ஒரு டாஸ்மாக் கடை வாசலில் நின்றுகொண்டு, பார்ட்னர்ஷிப்புக்கு ஆள் பிடிக்க முயற்சி செய்திறார். சதீஷிடம் ஒருவர் வந்து சிக்குகிறார்.

    புது விளக்கம்

    புது விளக்கம்

    அப்போது ஜிஎஸ்டி குறித்து புது விளக்கம் தருகிறார் சதீஷ். அதவாது, "ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி. நாம் சரக்கு வாங்குகிறோம். நமக்கு சேவை செய்யும் சப்ளையருக்கு டிப்ஸ் தருவது தான் சேவை வரி. இதை கொண்டு வந்தவர்கள் அப்போதே இப்படி அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம்", என்கிறார் சதீஷ்.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    ஜிஎஸ்டி குறித்து பாமரரும் புரிந்து கொள்ளும்படி எவ்வளவு எளிதாக இருக்கிறது சதீஷின் விளக்கம் என நெட்டிசன்கள் வாயடைத்து போய்விட்டனர். அதெல்லாம் ஓகே, ஆனால் சும்மா இருக்கும் தேரை தெருவில் இழுத்துவிடாமல் இருந்தால் சரி தான்.

    வைரல் காட்சிகள்

    ஏனென்றால் அருவம் படம் பல நல்ல கருத்துக்களைக் கொண்டிருக்கிறது என மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்திருக்கிறது. அதன் பல காட்சிகள் குறிப்பாக உணவில் ஊழல் காட்சி சமூகவலைதளங்களிலும் வைரலாகப் பரவி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சதீஷ் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறாரே.

    English summary
    In Aruvam movie comedy actor Sathish gives a new definition for GST
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X