நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்.. விஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரை உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகர்களின் போட்டியாக அதே காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்களை வைத்து ஒப்பிடுவது காலம் காலமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் மற்றும் விஜய் என இரு உச்ச நட்சத்திரங்களின் ஒப்பீடுகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியை பலரும் போட்டியாளர்களாக வைத்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இப்பொழுது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையில் சமூக வலைதளங்களில் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டுள்ளது.

காலம் காலமாக

காலம் காலமாக

தமிழ் திரை உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகர்களுக்கு போட்டியாக அதே காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்களை வைத்து ஒப்பிடுவது காலம் காலமாக இருந்து வருகிறது. இவ்வாறு பலரும் அறிந்த எம்ஜிஆர், சிவாஜி என தொடங்கிய இந்த ஒப்பீடு தற்பொழுது ரஜினி கமல், விஜய் அஜித், சிம்பு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இயல்பான நகைச்சுவை

இயல்பான நகைச்சுவை

சிவகார்த்திகேயன் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கலகலப்பான படங்களில் தனது இயல்பான நகைச்சுவை உணர்வு மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் இவர் தற்போது அயலான், டாக்டர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

கொஞ்சம் கூட கவலை

கொஞ்சம் கூட கவலை

தனது எதார்த்தமான நடிப்பின் மூலமும் அலட்டிக்கொள்ளாத குணத்தின் மூலமும் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்றுள்ளவர் விஜய்சேதுபதி. இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் நடிப்பிற்கான சிறந்த படமாக பலராலும் போற்றப்பட்டு வருகிறது. இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரங்களிலும் எந்த ஒரு நடிகரும் நடிக்க சற்று தயங்கும் கதைகளிலும் தனது இமேஜை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் நடித்து அதில் மாஸ் காட்டி வருகிறார்.

மலையாள ரசிகர்களுக்கு

மலையாள ரசிகர்களுக்கு

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரவுடிதான் மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா போன்ற திரைப்படங்கள் இவரின் ரசிகர்களின் அளவை இன்னும் பல மடங்கு உயர்த்தியது. பொதுவாக மலையாள ரசிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் என்றால் ஒரு படி மேலே பிடிக்கும் அந்த வகையில் விஜய் சேதுபதி மலையாள ரசிகர்களிடமும் அனைவரும் வியக்கும் தனது எளிமையான குணத்தின் மூலம் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்று அங்கும் பல ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

இவ்வாறு இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும்போது ஒப்பிட்டு பார்க்கும் ரசிகர்கள் சமீபத்தில் யாருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கின்றனர் எனவும் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி ட்விட்டரில் தன்னை 1 மில்லியன் கணக்குகள் பாலோ செய்ததற்கு மிகப்பெரிய நன்றி என ஓம் எழுத்தை கையில் வைத்து கட்டி அணைத்தவாறு ஒரு மாஸான புகைப்படத்தை வெளியிட்டு அளவில்லாமல் ஆதரவு கொடுத்து வரும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

நேரடியாக ரசிகர்களுக்கு

நேரடியாக ரசிகர்களுக்கு

இவ்வாறு விஜய்சேதுபதி வெளியிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனை 6மில்லியன் கணக்குகள் பாலோ செய்ததற்கு நன்றி என காமன் டீபி ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். மேலும் சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக தனது ரசிகர்களுக்கு 6மில்லியன் பாலோவர்ஸ் தன்னை பின் தொடர்வதற்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

Vijay Sethupathi Undergoing Depression • Sushant Singh
1 மில்லியன் பாலோவர்ஸ்

1 மில்லியன் பாலோவர்ஸ்

இவ்வாறு விஜய் சேதுபதி ட்விட்டரில் 1 மில்லியன் பாலோவர்ஸ்களையும், சிவகார்த்திகேயன் 6 மில்லியன் பாலோவர்ஸ்களையும் கொண்டிருப்பதை ஒரு சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி மாஸ்னா சிவகார்த்திகேயன் பக்கா மாஸ் என இருவரையும் ஒப்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X