பிக் பாஸ் என்ன ஆபாச படமா? பார்த்தத பார்த்தேன்னு ஒத்துக்கோயேன்.. காமெடி நடிகர் சதீஷ் ட்வீட்!

சென்னை: சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா இந்த சீசனில் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், இதுவரை ஒரு எபிசோடு கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் பார்க்கவே இல்லை என சத்தியம் செய்து கமல் உடன் வாதாடிய நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

கமல் பற்றி அவதூறு

கமல் பற்றி அவதூறு

ஊருக்கே தெரியும் உள்ளே கேமரா வச்சி ஷூட் பண்ணிட்டு இருக்காங்கடா.. என்றும் இதுல காமெடி என்னன்னா? 100 நாள் ஷோவ நடத்தி ஒருத்தர் சிஎம் ஆகிடலாம்னு நினைச்சிட்டு இருக்காரு.. கேட்டா பிக் பாஸ்ன்னு சொல்றான் என பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல் சார் பற்றியும் அபிஷேக் பேசிய வீடியோவை அபிஷேக் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த உடனே நெட்டிசன்கள் வைரலாக்கி விட்டனர்.

ஓட்டுப் போடவில்லை

ஓட்டுப் போடவில்லை

அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து விட்டு அந்த நிகழ்ச்சிக்கே அபிஷேக் ராஜா என்ன காரணத்திற்காக சென்றார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர். மேலும், அந்த அளவுக்கு விமர்சித்த அபிஷேக் இந்த ஷோவையே பார்க்காமல் எப்படி விமர்சித்து பேசினார் என்கிற கேள்வி எழ அவருக்கு ஒருத்தரும் ஓட்டுப் போடவில்லை.

அடம்பிடித்த அபிஷேக்

அடம்பிடித்த அபிஷேக்

பிக் பாஸ் நிகழ்ச்சியை 5 சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த ஷோவை ஒரு முறை கூட அபிஷேக் பார்த்ததே இல்லை என மறுபடி மறுபடி சொல்ல கமலும் மீண்டும் மீண்டும் அவரை தோண்டினார். ஆனால், உறுதியாக தான் ஷோவை பார்க்கவே இல்லை என அபிஷேக் அடம்பிடித்து பேசினார்.

சதீஷ் ட்வீட்

சதீஷ் ட்வீட்

அபிஷேக் ராஜாவின் அந்த அடத்தை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்கிற காமெடி மீம்ஸை போட்டு அபிஷேக் ராஜாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த காமெடி நடிகர் சதீஷ் அபிஷேக் பார்த்தேன்னு சொல்லேன் என போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

ஆபாச படமா

ஆபாச படமா

நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏன் யா பிக் பாஸ் என்ன பார்ன் மூவியா? பார்த்தத பார்த்தேன்னு ஒத்துக்கோயேன்.. அதுக்கு ஏன் இவ்ளோ பர்பாமன்சு என பொசுக்குன்னு அப்படியொரு ட்வீட் போட பிக் பாஸ் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை அந்த ட்வீட்டுக்கு கீழ் குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

சன்னி லியோன் படத்தில் நடிப்பதால்

சன்னி லியோன் படத்தில் நடிப்பதால்

நடிகர் சதீஷ் நாய்சேகர் படத்தை தொடர்ந்து சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார். அதனால், தான் இப்படியொரு ஆபாச படத்துடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்துள்ளாரா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

வீட்டுக்கு போயிடுவான்

வீட்டுக்கு போயிடுவான்

அவன் இனிமேல் பர்பாமன்சு பண்ணா என்ன? பண்ணலானா என்ன? இந்த வாரம் வீட்டுக்கு போயிடுவான் என்றும் நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவான்.. அவன்கிட்ட நேர்லயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க புரோ என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ன் மூவியோட கம்பேர் பண்ணி இப்படி ட்வீட் போட்டுட்டீங்களே என்றும் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X