பிக் பாஸ் பற்றி நடிகர் சதீஷ் கலகல ட்விட்.. என்ன ஒரு காத்தோட்டம் சுரேஷுக்கு!
சென்னை : பிக் பாஸ் சீசன் 4ல் பல போட்டியாளர்கள் இருந்தாலும் இப்பொழுது பார்வையாளர்களின் முழு கவனமும் அனிதா மற்றும் சுரேஷ் மீது தான் உள்ளது.
நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தினமும் எலியும் பூனையும் போல சண்டையிட்டு வரும் இவர்களை காணவே பிக்பாஸில் டிஆர்பி எகிறி வருகிறது.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் பிக்பாஸ் சுரேஷை வைத்து காமெடியாக போட்டுள்ள ட்விட் ஒன்று இப்பொழுது பலரையும் கலகலவென சிரிக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி
போற போக்கில் ஏதாவது ஒரு ட்விட்டைப் போட்டு விட்டு சில நடிகர்களை அவ்வப்போது கலாய்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் இப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி போட்ட ட்விட் ஒன்று பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

முட்டிக்கொள்ள
ரியோ ராஜ், ரேகா, அனிதா சம்பத், சுரேஷ், ஆரி, ஷிவானி, ரம்யா பாண்டியன் என பிரபலமான நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பிக் பாஸ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கிய நாள் முதலே அனிதா சம்பத்துக்கும் சுரேஷுக்கும் பல்வேறு இடங்களில் முட்டிக்கொள்ள அது இப்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது.

கணவர் ஏகாந்த தவநிலை
இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பலரும் பேசி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகரான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருக்க அதை சுரேஷ் பார்த்துக்கொண்டு காத்தோட்டமாக ஹாயாக சோபாவில் படுத்தவாறு எது எப்படி போனா நமக்கென்ன என பார்த்துக் கொண்டிருக்கும் சுரேஷின் புகைப்படத்தை பதிவிட்டு " மாமியார் vs மருமகள் சண்டையின்போது கணவர் இருக்கவேண்டிய ஏகாந்த தவநிலை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கலகலவென சிரித்தவாறு
எனது சுரேஷ் ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த போட்டோவையும் மாமியார் மருமகள் சண்டையின் கணவர்களின் நிலைமையை ஒப்பிட்டு பதிவிட்டிருக்கும் சதீஷின் இந்த ட்விட்டுக்கு பலரும் கலகலவென சிரித்தவாறு வழக்கம்போல் தங்களது கமெண்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











