மகளின் பிஞ்சு கையில் சிக்கிய நடிகர் சதீஷ்.. அப்பா மகள் ஹைக்கூ !

சென்னை : காமெடி நடிகர் சதீஷ்-க்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகிய நிலையில் இப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் சக நடிகர்களை தனது பாணியில் கலாய்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள சதீஷ் பதிவிடும் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கின் கேர்ள் பிரண்ட் பெயரை கூறவா என கலகலப்பாக பதிவிட்ட பதிவும் மிகப்பெரிய அளவில் வைரலானது.

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் இப்பொழுது ட்விட்டர் பக்கத்தில் தனது பிஞ்சு மகளின் கையில் தனது கை விரல் சிக்கிக்கொண்டவாறு பதிவிட்டுள்ள மகளின் முதல் புகைப்படம் வைரலாகிறது.

சிவகார்த்திகேயன் படங்களில்

சிவகார்த்திகேயன் படங்களில்

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், கார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வரும் சதிஷ் பெரும்பான்மையான சிவகார்த்திகேயன படங்களில் தொடர்ந்து நடித்து வர இவர்களின் கவுண்டர் காமெடிகள் நன்றாக வொர்க்கவுட் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது.

கிசுக்கிசு

கிசுக்கிசு

பல வருடமாக சிங்கிளாக இருந்த சதீஷ் பிரபல முன்னணி நடிகை ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கிசுக்கிசுக்கப்பட்ட நிலையில் சென்ற ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பெண் குழந்தை

பெண் குழந்தை

வைபவ் நடிப்பில் உருவான சிக்ஸர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாசியின் தங்கையான சிந்து சென்ற நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதை சமூக வலைத்தளப்பக்கங்களில் அறிவித்ததன் மூலம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அப்பா மகள் ஹைக்கூ படம்

அப்பா மகள் ஹைக்கூ படம்

இந்த நிலையில் சதீஷ் இதுவரை குழந்தையின் முகத்தை வெளியில் காட்டாமல், இருந்து வர இப்பொழுது, மகளின் பிஞ்சு கைக்குள் தனது கைவிரல் இருக்கின்றவாறு வெளியிட்டுள்ள இந்த முதல் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும், முதல் முறையாக அப்பா மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த " அப்பா மகள் ஹைக்கூ படம்" இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X