கைவிட்டு போன பரம்பரை சொத்து.. அனைத்தையும் இழந்த நடிகர் சத்யன்.. வேதனையில் உறவினர்கள்!

சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சத்யன் தனது சொத்துகளான 500 ஏக்கர் நிலம், அரண்மனை போன்ற வீடு, என அனைத்தையும் விற்றுவிட்டு சென்னையில் குடியேறி உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மாதம்பட்டியில் குட்டி ராஜா என அழைக்கப்பட்டு வந்த சத்யன், தனது சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு சொந்த ஊருக்கே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சத்யன். இவர், விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். கோயம்பத்தூர் மாவட்டம் மாதம்பட்டியில் பிறந்த நடிகர் சத்யன், ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். 500 ஏக்கர் நிலம், அரண்மனை போன்ற வீடு என, 500 கோடிக்கு சொந்தக்காரர். சத்யனின் அப்பா சிவக்குமாருக்கு சினிமாவில் மீது ஆர்வம் இருந்ததால், தனது மகன் சத்யனை ஹீரோவாக வைத்து இரண்டு படங்களை தயாரித்தார்.

Sathyan Sathyaraj property
Photo Credit:

நடிகர் சத்யன்: 2000ம் ஆண்டு இளையவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார் நடிகர் சத்யன். அந்த படத்தை தொடர்ந்து, கண்ணா உன்னை தேடுகிறேன் என்கிற படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், காமெடி பக்கம் தனது கவனத்தை செலுத்திய சத்யன், தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நகைச்சுவை நடிகராக மாறினார். அந்த படத்தை தொடர்ந்து, மாயாவி, ஆறு, திருப்பதி, வேட்டைக்காரன், நண்பன், சந்தோஷ் சுப்புரமணியன் ஆகிய படத்தில் நடித்து பிரபலமான சத்யன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கைவிட்டு போன சொத்து: மாதப்பட்டியில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த சத்யன், தற்போது, சென்னையில் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் சத்யனின் அப்பா மாதம்பட்டி சிவகுமாருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால், தனது மகனை வைத்து இரண்டு படங்களை தயாரித்தார். அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட நஷ்டத்தை சொத்துக்களை விற்று சரி செய்துள்ளார். இதனால், பல சொத்துக்கள் கைவிட்டு போனதாக கூறப்படுகிறது. தற்போது, மிஞ்சம் மீதி இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு, சென்னையில் அவர்கள் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாத்தியனின் உறவினர்களையும் வேதனை அடைய செய்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோக்களில் இந்த விஷயம் குறித்து சத்யனின் உறவினர்கள் வேதனையுடன் பகிர்ந்து இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X