ரஜினியுடன் இணையும் மூத்த நகைச்சுவை நடிகர்.. வெளியான புதிய தகவல்

சென்னை: மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில் ரஜினியுடன் புதிய படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை

ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை

இதனையடுத்து கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. ஆனால் அந்தப் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தனது கணவரான தனுஷுடன் திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டார். தனுஷும், ஐஸ்வர்யாவும் பரஸ்பரமாக முடிவு எடுத்து தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தனர். இதனையடுத்து ஐஸ்வர்யா தனது திரைப்பட பணிகளிலும், தனுஷ் தனது நடிப்பிலும்கவனம் செலுத்த ஆரம்பித்தானர்.

லால் சலாம் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா

லால் சலாம் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா

திருமண வாழ்க்கை முறிந்தாலும் சோர்வடையாத ஐஸ்வர்யா இப்போது லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ரஜினிகாந்த்தும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் கிட்டத்தட்ட 45லிருந்து 50 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. தனது மகள் படத்தில் நடிப்பதால் அவரும் உற்சாகத்துடன் இருப்பதாக தெரிகிறது.

லால் சலாம் படத்தில் இணையும் செந்தில்?

லால் சலாம் படத்தில் இணையும் செந்தில்?

லால் சலாம் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி லால் சலாம் படத்தில் மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ரஜினியுடன் அதிக நேரம் படத்தில் வருவார் என கூறப்படுகிறது. ரஜினியும், செந்திலும் கடைசியாக படையப்பா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் இருவரும் செய்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. எனவே இந்தப் படத்திலும் அந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

முன்னதாக தர்பார், அண்ணாத்த தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். அந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் இதன் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரஜினி லால் சலாம் படத்தில் இணைவார் எனவும், அவர் விரைவில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X