Senthil: கேங்ஸ்டராக நடிக்கும் நடிகர் செந்தில்.. அட இந்த நடிகரும் இருக்காரா?

சென்னை: நடிகர் செந்தில் பல ஆண்டுகளாக சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து கவுண்டமணியுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள செந்தில், காமெடியை தவிர்த்து பல படங்ளில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். பொது பிரச்சினைகளுக்கும் இவர் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் செந்தில் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. இதில் இவர் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார்.

Senthil Cool suresh tamil cinema

நடிகர் செந்தில்: நடிகர் செந்தில் பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் எவர்கிரீன் பேவரிட் ரகம். கவுண்டமணியுடன் மட்டுமில்லாமல் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு இவர் நடித்த பல காமெடி கேரக்டர்கள் கவுண்டமணியை கடுப்பேற்றுவதாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியதாகவும் அமைந்தன. இவரது காமெடி பேசப்பட்டது போலவே குணச்சித்திர நடிகராக இவர் நடித்த பல படங்களும் சிறப்பாக அமைந்தன.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் செந்தில்: இதனிடையே தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியை கொடுத்துவரும் செந்தில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் கூல் சுரேஷ், எம்எஸ் ஆரோன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி, பிரபாகரன், மகாநதி ஷங்கர், ஸ்ரீவித்யா, வாரியர் சதீஷ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். பிஎம்எஸ் சினி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை முரளி பிரபாகரன் தயாரிக்கவுள்ளார். சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

செந்தில் பட பூஜை: இந்த பூஜையில் இயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, பிக்பாஸ் ரானவ், ஷனம் ஷெட்டி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர். நாற்காலிக்கான போட்டியை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த போட்டி நான்கு கேங்ஸ்டர்களுக்கிடையில் நடப்பதாகவும் இதில் வெல்லப்போவது யார் என்பதாக படத்தின் காட்சிகள் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. காமெடியனாக, கேரக்டர் ரோல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் செந்தில் இந்தப் படத்தில் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ஆக்ஷன் கதைக்களம்: அதிரடி திருப்பங்களுடன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இந்தப் படம் கமர்ஷியலாக எடுக்கப்படவுள்ளதாகவும் ஆந்திரா மற்றும் கேரளாவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில், இம்மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X