கண்ணா இது ‘பவர் லட்டு’.. செந்தில் உடன் இணைந்த பவர் ஸ்டார்.. பவன் கல்யாண் பாவமில்லையா பாஸ்!

சென்னை: திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக கிளம்பிய சர்ச்சை உலகளவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. திருப்பதியை சுத்தம் செய்ய ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்வதாக ஆந்திராவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அறிவித்து இருந்தார்.

மேலும், விரதம் இருந்து கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை கஷ்டப்பட்டு மூச்சு வாங்க நடந்து சென்று பெருமாளை சேவித்தார். திருப்பதி லட்டு தொடர்பாக கருத்துக் கூறினால் சர்ச்சை வெடிக்கும் என மறுத்த நிலையிலேயே கார்த்திக்கு பஞ்சாயத்து கிளம்ப உடனடியாக பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்தார்.

power star srinivasan senthil

பிரகாஷ் ராஜ் லட்டுவை வைத்து அரசியல் செய்யாமல், மக்களுக்கு தேவையான பணிகளை பாருங்கள் என சொல்ல திருப்பதி லட்டுவில் மட்டுமின்றி உண்டியலிலும் ஊழல் நடந்துள்ளது என அடுத்த குண்டை பவன் கல்யாண் போட்டுள்ளார். இப்படி பல பஞ்சாயத்துக்கள் ஓடிக் கொண்டிருக்க கோபி, சுதாகர் லட்டு பாவங்கள் வீடியோ வெளியிட்டு அதை நீக்கி மன்னிப்பு கோரினர். அதன் பின்னர் சிக்கன் லட்டு செய்து விஜே சித்து வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், தற்போது பவன் கல்யாணுக்கே டஃப் கொடுக்கும் விதமாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பவர் லட்டு படத்துடன் வந்திருக்கிறார்.

பவர் லட்டு: லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்திற்கு "பவர் லட்டு" என பெயர் வைத்துள்ளார்.

power star srinivasan senthil

படக்குழு: இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த "முன்தினம்" படத்தை தயாரித்து இயக்கினார்.. அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு. இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ் லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

பவர் ஸ்டாருடன் செந்தில்: வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S Entertainment சார்பில் எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிட உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களின் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் அவர்கள் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர். அதுமட்டுமின்றி செந்தில் அவர்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Read more about: power star srinivasan senthil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X