படையப்பா 2 வந்தால் கேரக்டர் என்ன?.. செந்தில் ஓபன் டாக்.. அவரும் ரொம்ப எதிர்பார்த்திருக்கிறார்.. நடக்குமா?
சென்னை: கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. ரஜினி ஹீரோவாகவும், ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும் நடித்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முழு கமர்ஷியல் பேக்கேஜாக உருவான அப்படம் இன்றுவரை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். நேற்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸானபோதும் ரசிகர்கள் குறையாத உற்சாகத்துடன் சென்று படம் பார்த்தார்கள். இந்நிலையில் படையப்பா 2 பற்றி செந்திலும் பேசியிருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா படத்தை ரஜினியே தயாரித்து அதற்கான மூலக்கதையையும் உருவாக்கியிருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற நந்தினி கேரக்டரை வைத்துதான் அந்த மூலக்கதையை உருவாக்கியிருந்தார் சூப்பர் ஸ்டார். இதில் ரஜினியுடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மெகா ஹிட்டான படம்: கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கம்ப்ளீட் கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ரஜினியின் ஸ்டைல், ரவிக்குமாரின் ஸ்க்ரீன் ப்ளே, ரஹ்மானின் இசை, ரம்யாவின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்று இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது.

ரீ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதலில் ரிலீஸானபோது எப்படி ரசிகர்கள் கொண்டாடினார்களோ அதே நிலைமை நேற்றும் இருந்தது. முக்கியமாக இப்போது இருக்கும் ஜென் ஸி தலைமுறை இளைஞர்கள் தியேட்டரில் பார்க்காத குறையை நேற்றைய ரீ ரிலீஸ் தீர்த்து வைத்தது என்றே சொல்லலாம். அவர்களும் முழுக்க முழுக்க என்ஜாய் செய்தார்கள்.
படையப்பா 2: இது ஒருபக்கம் இருக்க படையப்பா ரீ ரிலீஸை முன்னிட்டு ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த ப்ரோமோஷன் வீடியோவில், 'அடுத்த ஜென்மத்திலாவது உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நீலாம்பரி சொல்வதோடு படம் முடியும்'. படையப்பா 2 படம் எடுக்க கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கூடிவந்தால் ரசிகர்களுக்கு திருவிழாவாக அமையும்" என்று கூறி மேலும் ஒரு சர்ப்ரைஸை கொடுத்தார். ரஜினி அப்படி சொன்னதிலிருந்து படையப்பா 2 பற்றிய பேச்சுக்களும் எழுந்திருக்கின்றன.
செந்தில் பேட்டி: இந்நிலையில் படையப்பா படத்தில் காமெடி ரோலில் கலக்கிய செந்தில் படையப்பா 2 பற்றி பேசியிருக்கிறார். அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "படையப்பா படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் அதே கேரக்டரை கொடுத்தாலும் சரி, பக்கத்தில் நிற்கும் கேரக்டராக இருந்தாலும் சரி. நான் நடிப்பேன்" என்றார். முன்னதாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த செந்தில் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











