சேஷுவின் மரணம் என்னை மனதளவில் பாதித்துவிட்டது.. ரவி மரியா கண்ணீர் அஞ்சலி!
சென்னை: லொள்ளு சபா புகழ் சேஷு திடீரென உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு நடிகர் ரவி மரியா நேற்று இரவே அவரது வீட்டுக்குச் சென்று சேஷுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உதவி என்று கேட்டவர்களுக்கு உதவிசெய்யக்கூடியவர் சேஷு அவரது மரணம் என்னை மனதளவில் பாதித்துவிட்டது என்றார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்தவர் லொள்ளு சபா சேஷு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார். இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் சேஷு. இவர் பெரும்பாலும் சந்தானத்துடன் நினைத்து A1, பாரீஸ் ஜெயராஜ், குலுகுலு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சேஷு மரணம்: சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்தில் சேஷூ நடித்த கதாபாத்திரம் அதிகம் அளவில் பேசப்பட்டது. இதையடுத்து, கடந்த 15ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேஷு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஓடி ஓடி உதவி செய்வார்: சேஷு மரண செய்தியை கேள்விப்பட்ட நடிகர் ரவி மரியா, நள்ளிரவே வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சேஷு ரொம்ப வெகுளியான மனிதர் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் தன்னிடம் இல்லாவிட்டாலும், மற்றவர்களிடம் அண்ணா ஒரு ஐந்து ஆயிரம் கொடுங்க என்று கேட்டு உதவி செய்துக்கொண்டே இருப்பார். அதே போல படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் போது அந்த இடமே கலகலப்பாக இருக்கும். வடக்குப்பட்டி ராமசாமி இடத்தில் இவருடைய நகைச்சுவைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன்பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்பு வரும் என்று நாங்கள் நினைத்து இருந்த நேரத்தில் கடவுள் இவ்வளவு பெரிய இழப்பை கொடுத்து விட்டார்.
மனதளவில் பாதித்துவிட்டது: அவருடன் 100 படத்திற்கு மேல் நடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அது நடக்காமல் போனது உண்மையில் என்னை மனதளவில் பாதித்துவிட்டது. ஏன் என்றால் சினிமாவில் ஈரம் உள்ள நல்ல ஆட்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம், அனைவரும் சுயநலமாகவே பழகக்கூடியவர்கள், அப்படிப்பட்ட இந்த உலகத்தில் சுயநலம் இல்லாமல் பழகக்கூடிய ஒருவர் சேஷு, அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











