‘டாடா‘ படம் பார்த்து அழுதுவிட்டேன்.. தரமான படம்.. பாராட்டிய சூரி!

சென்னை : திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் டாடா படத்தைப் பார்த்த நடிகர் சூரி சிறப்பான, தரமான படம் என பாராட்டினார்.

டாடா திரைப்படம் கடந்த 10ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தில் கவின், அபர்ணாதாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

டாடா திரைப்படம்

டாடா திரைப்படம்

ஒரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதில் அழகாக நடித்து இருக்கிறார் கவின். மாணவன், காதலன்,கணவன், அப்பா என கவினின் நடிப்பு இப்படத்தில் சற்று மெருகேறி இருக்கிறது. டீன் ஏஜ் பருவத்தில் காதலில் விழுந்து, எல்லை மீறி பழகி கடைசியில் கர்ப்பம் அடைகிறார் படத்தின் நாயகி அபர்ணா தாஸ் (சிந்து). இறுதியில் பஞ்சாயத்து காவல் நிலையம் வரை போக, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

படத்தின் கதை

படத்தின் கதை

காதலிக்கும் போது பணம், வறுமை,பசி, ஈகோ கண்ணுக்கு தெரியாது. ஆனால் வாழ்க்கை தொடங்கும் போது இவை அனைத்தும் கண்முன் வந்து பேயாட்டம் ஆடும். நீயா, நானா ஒரு கை பார்த்துவிடலாம் என்பதில் காதல் காணாமலே போய்விடுகிறது. அப்படி காணாமல் போன காதலோடு போராட முடியாமல், குழந்தை பெற்ற சிந்து குழந்தையை கவின் (மணி)யிடம் விட்டு பெற்றோருடன் சென்று விடுகிறார். அது வரை கல்லூரி மாணவனாக இருந்த மணி குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்க்கிறார். இறுதியில் காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

வசூல் அதிகரிப்பு

வசூல் அதிகரிப்பு

டாடா படம் வழக்கமான கதையைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததால், படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. இப்படத்தை கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் குடும்பத்தினரும் திரையரங்கு வந்து படத்தை பார்த்து வருகின்றனர். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து வருகிறது.

பாராட்டிய சூரி

பாராட்டிய சூரி

கவின் நடித்த டாடா படம் பார்த்த நடிகர் சூரி படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். டாடா படம் ரொம்ப நிறைவான படம், சிறப்பான ஒரு படம் இந்த படத்தை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். படம் ஆரம்பித்து முடியும் வரை நான் செல்போனை தொடவே இல்லை. மிக சிறப்பான படம், நிறைய இடத்தில் சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. சில உருக்கமான காட்சிகளை பார்த்து அழுதுவிட்டேன். இயக்குநர் ஒரு நிறைவான படத்தை கொடுத்து இருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். ஒரு நிறைவான படத்தை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் அனைவரும் படத்தை பாருங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X