For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பரோட்டா காமெடியன் முதல் வெற்றிமாறன் படத்தின் ஹீரோ வரை: சூரியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

  |

  சென்னை: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் சூரியின் 45வது பிறந்தநாள் இன்று.

  Recommended Video

  Soori சாமி தரிசனம், போட்டி போட்டு Selfie எடுத்த Fans *Celebrity

  பிறந்தநாள் கொண்டாடி வரும் சூரிக்கு, திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  சிறுசிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய சூரி, இன்று விடுதலை படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார்

  Actor Soori Birthday Special : எலெக்ட்ரீஷியன் டூ ஹீரோ..சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்!Actor Soori Birthday Special : எலெக்ட்ரீஷியன் டூ ஹீரோ..சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  சுசிந்திரன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படம் தான் சூரியை நகைச்சுவை நடிகனாக அடையாளப்படுத்தியது. குறிப்பாக அந்தப் படத்தில் வரும் பரோட்டா காமெடியால் பிரபலமான சூரிக்கு, 'பரோட்டா சூரி' என்ற அதே பெயரே அவரின் அடையாளமாகிப் போனது. ஆனால், 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திற்கு முன்பே, சூரி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் திரைப்படங்களில் தலை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது திரை பயணத்தை தொடர்ந்த சூரி, சங்கமம், ரெட், வின்னர், ஜீ, தீபாவளி என பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

  ஜூனியர் வைகைப்புயல்

  ஜூனியர் வைகைப்புயல்

  'வெண்ணிலா கபடிக் குழு' மூலம் பிரபலமான சூரி, மதுரையை பூர்விகமாகக் கொண்டவர். அதனால், மதுரை பேச்சு வழக்கும், வெள்ளந்தியான முக பாவனை, திருட்டு முழி, பாடி லேங்குவேஜ் என எல்லாமே சூரியின் காமெடிக்கு கை கொடுத்தன. களவாணி, நான் மகான் அல்ல, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட படங்களில், சூரியின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகினர். வடிவேலுவின் காப்பியாக இல்லாவிட்டாலும், மதுரை மண்ணின் நக்கலும் நய்யாண்டியும், அவரை ஜூனியர் வைகைப்புயலாகவே வளர்த்துவிட்டது.

  கிராமத்து கெட்டப்புக்கு சூரி தான்

  கிராமத்து கெட்டப்புக்கு சூரி தான்

  தமிழில் கிராமத்து பின்னணிக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். அதேபோல், அந்தப் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க ஒரு தனித்துவம் தேவைப்படும். அது சூரியிடம் இயல்பாகவே இருந்தது. "ஏன்... என்னாவாம்.... அதாஎப்புடி... அவிங்க சொன்னா... இந்த வந்துட்டேன்யா.... ஐயோ கண்டுபுடிச்சிட்டானே... ஆத்தாடி..." என சின்ன சின்ன வசனங்களில் கூட அவ்வளவு யதார்த்தமான எக்ஸ்ப்ரஷன்களை அள்ளி வீசிக் கொண்டேயிருப்பார். அதனாலே, கிராமத்துப் பின்னணி படங்கள் என்றாலே, "இந்தாப்பா நம்ம சூரி நடிச்சிருக்காப்ளயா" என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு மக்களின் மனதில் பதிந்துவிட்டார்.

  டாப் ஹீரோக்களுடன் காம்போ

  டாப் ஹீரோக்களுடன் காம்போ

  காதலுக்கு மரியாதை படத்தில் சிறு கேரக்டரில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய சூரி, பின்னாளில் விஜய்யுடன் 'ஜில்லா' படத்தில் நடித்து ரவுசு காட்டினார். அதேபோல், அஜித்துடன் 'வேதாளம்', ஜெயம் ரவியுடன் 'நிமிர்ந்து நில்', சூர்யாவுடன் 'அஞ்சான்', விஷாலுடன் 'பாயும் புலி', சிம்புவுடன் 'இது நம்ம ஆளு', விக்ரமுடன் 'ஸ்கெட்ச்', இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜியுடன் 'அண்ணாத்த' என டாப் ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்து மாஸ் காட்டினார்.

  வெற்றிமாறன் பட ஹீரோ

  வெற்றிமாறன் பட ஹீரோ

  சூரியின் கேரியரில் சிவகார்த்திகேயனுடன் அவரது காம்போ ரசிகர்களின் ஃபேவரைட் எனலாம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'நம்ம வீட்டு பிள்ளை'' என காமெடியில் கலங்கடித்த இந்தக் கூட்டணி, இறுதியாக 'டான்' படத்தில் தமிழையும் கொரிய மொழியையும் கலந்துபேசி, ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தனர். இப்படி காமெடியனாக கலக்கிவரும் சூரி, இப்போது முன்னணி இயக்குநரான வெற்றிமாறனின் விடுதலை படத்தில் லீட் ரோலில் நடித்துவருகிறார். குறிப்பாக இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதுவே சினிமா பயணத்தில் அவரது சாதனை மணிமகுடம் என, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  சூரிக்கு ரசிகர்கள் வாழ்த்து

  சூரிக்கு ரசிகர்கள் வாழ்த்து

  விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற காமெடி வசனத்தின் எடுத்துக்காட்டாக திரையில் ஜொலித்து வரும் சூரிக்கு, திரை பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதேபோல், ரசிகர்களும் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவரது வெற்றியை பாராட்டி வருகின்றனர்.

  English summary
  Comedy actor Soori is celebrating his 45th birthday today. Here's Soori's cinema journey from small roles to leading comedian
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X