சசிகுமார்- ஜோதிகா படத்தில்... காமெடி தாண்டி வேற லெவல் சூரி... ஆச்சரியப்படும் படக்குழு
சென்னை: சசிகுமார்- ஜோதிகா நடிக்கும் படத்தில் காமெடி நடிகர் சூரி அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார்.
'கத்துக்குட்டி' படம் மூலம் கவனிக்கப்பட்ட சரவணன், அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார், ஜோதிகா நடிக்கின்றனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் இருவரும் அண்ணன் -தங்கையாக நடிக்கின்றனர்.
Recommended Video
நடிகர் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இதில் சிஜாரோஸ், சமுத்திரக்கனி, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர்.

கிராமத்து கதை
தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதியில நடக்கும் கதை இது. இதுவரை இப்படியொரு கேரக்டரில் ஜோதிகாவைப் பார்த்திருக்க முடியாது. முதல்முறையாக, பக்காவான கிராமத்துக் கதையில் அவர் நடிக்கிறார்.

புதுக்கோட்டை பெண்
அச்சு அசலான புதுக்கோட்டை பெண்ணாக அவரை இதில் பார்க்கலாம். அவரது லுக்கை முழுமையாக மாற்றி இருக்கிறோம். இதற்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்படுகிறது என்று படக்குழு தெரிவித்திருந்தது.

குணசித்திர சூரி
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு 20 ஆம் தேதி தஞ்சாவூர் பகுதியில் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூரி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுவரை காமெடியில் பார்த்த சூரி இதில் தெரியமட்டார். குணசித்திர வேடத்தில் மிரட்டியுள்ளார் என்கிறார்கள்.

ஜனகராஜ் கேரக்டர்
இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரக்டரில் அவர் நடிக்கிறார். நாயகன் படத்தில் ஜனகராஜ் கேரக்டர் போல இதில் இவர் கேரக்டர் இருக்கும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











