யஷ்க்கு பாராட்டு சொன்ன சூரி.. அவர் எதுக்காக காத்திருக்காரு தெரியுமா?

சென்னை : நடிகர் சூரி ரசிகர்களை கவர்ந்த காமெடியனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் விருமன் படம் வெளியானது. முன்னதாக ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனிடையே தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சூரி. விரைவில் படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் சூரி

நடிகர் சூரி

நடிகர் சூரி, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டிப் போட்டு வருகிறார். முன்னதாக சில கேரக்டர்களில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடிக் குழுவில் பரோட்டா காமெடியில் நடித்து இவர் நல்ல வரவேற்பை பெற்றார். இந்தக் காமெடி ரசிகர்களின் எவர்கிரீன் காமெடியாக தற்போதும் மீம்ஸ்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்தப் படங்கள்

அடுத்தடுத்தப் படங்கள்

இந்தப் படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த படங்களில் காமெடியனாக இருந்தாலும் சிறப்பான கேரக்டர் அமைந்தது. சந்தானம் இல்லாத குறையை சூரி போக்கினார். ஆனாலும் இவருக்கு சிட்டி கேரக்டர்களை காட்டிலும் கிராமத்து கெட்டப்புகளில் நடித்த கேரக்டர்களே சிறப்பாக கைக்கொடுத்தன.

முன்னணி நடிகர்களுடன் சூரி

முன்னணி நடிகர்களுடன் சூரி

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கார்த்தி என அடுத்தடுத்த நாயகர்களுடன் நடித்து வருகிறார் சூரி. ரஜினியுடன் இவர் நடித்து வெளியான அண்ணாத்த படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சமீபத்தில் வெளியான விருமன் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

விடுதலை படத்தின் நாயகன்

விடுதலை படத்தின் நாயகன்

இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை படத்தில் நடித்து வருகிறார் சூரி. படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் சூரி. புதிய படங்களுக்கும் நடிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இருந்து சமூக நிகழ்வுகளிலும் இவர் தன்னுடைய கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேஜிஎப் ஹீரோ யஷ்ஷிற்கு இவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

யஷ்ஷின் புதிய புகைப்படம்

யஷ்ஷின் புதிய புகைப்படம்

நேற்றைய தினம் கேஜிஎப் படங்களின் நாயகன் யஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய புதிய போட்டோஷுட் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதில் இருட்டான பின்புலத்தில் வெள்ளை உடையில் அவர் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில் தீவிரமான முகபாவத்துடன் அவருக்கேயுரிய தாடியுடன் காணப்பட்டார்.

யஷ்ஷிற்கு சூரி பாராட்டு

யஷ்ஷிற்கு சூரி பாராட்டு

இந்நிலையில் யஷ்ஷின் இந்தப் புகைப்படத்திற்கு நடிகர் சூரி தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் சிறப்பாக காணப்படுவதாகவும் கேஜிஎப் 3 படத்திற்காக காத்திருப்பதாகவும் சூரி தெரிவித்துள்ளார். தென்னிந்திய அளவில் நடிகர்கள், சக நடிகர்களை பாராட்டும் ஆரோக்கியமான போக்கு சமீபகாலங்களில் அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X