வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் தமிழ் காமெடி நடிகர்.. வாயடைத்துப் போன திரையுலகம் !
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கலக்க நாயகனாக வலம் வரும் நடிகர் சூரி வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.
Recommended Video
தனது வெள்ளந்தியான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் சூரி தமிழில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சீமராஜாவில் சிக்ஸ் பேக்கை காட்டி அனைவரையும் அசத்தி இருந்த நிலையில் தற்போது தமிழில் அசுர இயக்குனர் ஒருவருடன் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த வொர்க் அவுட் வீடியோ பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

இயல்பான காமெடி
கிராமத்து வாசனையுடனும் வெள்ளந்தியான பேச்சுடனும் திரைப்படங்களில் தனது இயல்பான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகர் சூரி தற்போது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஏகோபித்த ஆதரவுடன்
வித்தியாசமான டயலாக் டெலிவரி, வித்தியாசமான பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் தனித்துவமாக தன்னை தொடர்ந்து பிரதிபலித்து வரும் சூரி தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் பல திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி அடைந்து வருகிறது.

காமெடியில் கலக்கி
சிவகார்த்திகேயன் சூரி கூட்டணி வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப் படத்திலிருந்து மிகப்பிரபலமானதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து காமெடியில் கலக்கி வருகின்றனர்.

சிக்ஸ் பேக் தோற்றத்தில்
சமீபத்தில் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் சிக்ஸ் பேக் தோற்றத்தில் முதன்முறையாக சூரி தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் உடம்பை வெறித்தனமாக தயார் செய்து கொண்டு வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில்
வடிவேலு, சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோக்களாக நடித்து வரும் நிலையில் சூரி இன்றுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

வெறித்தனமாக வொர்க் அவுட்
இவ்வாறு மாஸான தகவல் கசிந்த நிலையில் சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு லாக்டவுன் முடிந்து ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்துவரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னணி கதாநாயகர்களே சிக்ஸ் பேக் வைக்க திணறி வரும் நிலையில் சூரி அசால்டாக சிக்ஸ் பேக்கை வைத்து பலரையும் புருவம் தூக்க வைத்துள்ளார்.

வியப்பில் ஆழ்த்தி
இவ்வாறு வெளியாகியுள்ள இந்த வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சிலர் சூரி வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கிறார் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











