நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்
மதுரை : பல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வரும்
நடிகர் சூரி. தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி
2017ம் ஆண்டு "அம்மன்" உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில்
துவக்கினார்.
"அம்மன்" உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து
நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி "அம்மன்"
உயர்தர சைவ உணவகம் மற்றும் "அய்யன்" உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு
புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில்
துவங்கியுள்ளார்.

இந்த புதிய உணவகங்களை சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர்
சிவகார்த்திகேயன் இன்று (நவம்பர் 1) குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போ சூப்பராக ஒர்க் அவுட் ஆகும்.
அதற்கு எடுத்துக்காட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா
கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள். இருவரும் இணைந்து செய்யும்
நகைச்சுவை காட்சிகளுக்கு அளவே இருக்காது. இவர்களின் காம்போ இன்று தமிழ்
ரசிகர்களின் ஃபெவரட்.

பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் "அம்மன்" உயர்தர சைவ
உணவகம் மற்றும் "அய்யன்" உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு
விமர்சையாக நடைபெற்றது.

திறப்புவிழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி
மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











