நட்புன்னா இதுதான்.. காலையிலையும் தம்பதி சகிதமாக வந்து சதீஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

Recommended Video

Sathish Sindhu Marriage | Sivakarthikeyan | Vijay Sethupathi

சென்னை: காமெடி நடிகர் சதீஷுக்கும் சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சியின் சகோதரி சிந்துவுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.

நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று மாலையும், இன்று காலையும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து தனது நண்பன் சதீஷின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

தாலி கட்டியாச்சு

மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சதீஷின் திருமணம் இன்று நடைபெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகள் சிந்துவின் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார் சதீஷ். நடிகர் சதீஷ் தாலி கட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நல்ல நட்பு

நல்ல நட்பு

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் என்ட்ரி ஆகும் போதே தனது நெருங்கிய நண்பரான சதீஷையும் உடன் அழைத்துக் கொண்டார். மேலும், அவர் நடிக்கும் படங்களில் சதீஷுக்கு வாய்ப்பை வழங்கி தனது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

காலையிலும் குடும்பத்துடன் ஆஜர்

நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு நடிகர் சதீஷை வாழ்த்தி சென்றனர். ஆனால், சதீஷின் உயிர் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன், திருமண வரவேற்பு மற்றும் காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் குடும்பத்துடன் ஆஜராகி சதீஷை வாழ்த்தினார்.

இனிமே சிங்கிள் இல்லை

காமெடி நடிகர் சதீஷுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், பேச்சுலர் பாய் ஃபேமிலி மேனாக மாறியுள்ளார் என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X