Vadivel Balaji: அப்பா இல்லாமல் கஷ்டப்படுகிறேன்.. வடிவேலு பாலாஜி மகன் கண்ணீர்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போலவே அனைவரையும் தனது திறமையால் உடல் அசைவுகளாலும், முக பாவனையாலும் சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி. வடிவேலுவை போலவே இருப்பதால் இவரை அனைவரும் வடிவேலு பாலாஜி என்று செல்லமாக அழைத்து வந்தனர். இவர் மறைவுக்கு, தான் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக அவரின் மகன் கண்ணீருடன் பேசி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் அடையாளமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி, தனது நகைச்சுவையால் பலருடைய மனதில் இடம் பிடித்த இவர், பலரை கவலை மறந்த சிரிக்க வைத்து, மனதில் இருந்த துன்பத்தை நீக்கிய நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக இருந்தார். இவர் விஜய் டிவியில் கலக்கப்போது யாரு, சிரிச்சா போச்சு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பலரை சிரிக்க வைத்துள்ளார். தொலைக்காட்சி மட்டுமில்லாமல், யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா போன்ற என்ன படங்களிலும் நடித்துள்ளார்.

vadivel balaji vadivel balaji son
Photo Credit:

உயிரிழந்தார்: இந்நிலையில், நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ செலவு அதிகமானதால், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுதே அவரின் கைகால்கள் செயல் இழந்த நிலையில் இருந்தன. அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரின் இறந்த செய்தியைக் கேட்ட அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன், விஜய் டிவி புகழ் இன்னும் சில நடிகர்கள் அவரின் குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்தனர்.

வடிவேலு பாலாஜியின் மகன்: இந்நிலையில், வடிவேலு பாலாஜின் மகன் ஸ்ரீகாந்த் தற்போது மிகுந்த வருத்தத்துடன் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார். அப்பா இருந்த வரை, எந்தவிதமான கஷ்டமும் தெரியாமல் என்னை வளர்ந்து விட்டார். ஆனால், அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது. நான் இப்போது தான் ஒரு வண்டி வாங்கினேன், அதன் ஈஎம்ஐ கூட என்னால் கட்ட முடியவில்லை, அதை கட்டுவதற்கே கஷ்டப்படுகிறேன். அப்பா உயிரோடு இருந்த இருந்தால், அவரே வண்டியை வாங்கி கொடுத்து இருப்பார். ஆனால், அவர் இப்போ உயிரோடு இல்லை. என்னோட ஆசை எல்லாம், அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு பலரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X