கண்ணை மூடிக் கொண்டு High pitch- ல் பாடும் வடிவேலு.. வைரலாகும் வீடியோ ...எந்த படத்திற்கு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் காமெடி பொக்கிஷமாக விளங்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு

Recommended Video

பாட்டு பாடிய வடிவேலு VaigaiPuyal Vadivelu Ultimate fun speech | Lyca Productions

கடந்த சில ஆண்டுகளாக திரையில் சரியாக தோன்றாத வடிவேலு இப்பொழுது நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் ரிட்டன்ஸ் கொடுக்கிறார்

இந்த நிலையில் வடிவேலு High pitch- ல் பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி

இம்சை அரசன் 23ம் புலிகேசி

நடிகர் வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் காமெடியை வழங்கி தமிழ் சினிமாவின் காமெடி வள்ளலாக இருந்து வரும் வடிவேலு இப்போதுள்ள குழந்தைகளுக்கும் காமெடி ஜாம்பவனாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள வடிவேலு கதாநாயகனாக பல படங்களில் பட்டையை கிளப்பியுள்ளார் அந்த வகையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இவருக்கு மற்றும் ஒரு பரிமாணத்தை கொடுத்தது.

 இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இம்சை அரசன் 23ம் புலிகேசி கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் இம்சை அரசன் 24ம் புலிகேசி தயாராக இருந்தது. சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் உருவாக இருந்த அந்த திரைப்படம் ஆரம்பகட்ட படப்பிடிப்பிலேயே பல்வேறு பிரச்சனைகளால் தடைபட்டு போனது. இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் மீண்டும் தொடங்கப்படும் வடிவேலுவை மீண்டும் திரையில் காண்போம் என ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர்

ஏமாற்றமாகவே இருந்தது

ஏமாற்றமாகவே இருந்தது

கடந்த சில ஆண்டுகளாகவே திரையில் தோன்றாமல் வடிவேலு இருந்தது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. இந்த நிலையில் வடிவேலு தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நீண்ட காலமாக வேண்டுகோள் இருந்து வந்தது. அதன் பயனாக இப்பொழுது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து வருகிறார்.

 நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

முழுக்க முழுக்க வடிவேலுக்காகவே உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சுராஜ் மற்றும் வடிவேலு ஏற்கனவே மருதமலை, தலைநகரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நாய் சேகர் என வைக்கப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தின் பெயர் நாய் சேகர் என்ற பெயரிலேயே இப்பொழுது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.

High pitch- ல் பாடுகிற வீடியோ

High pitch- ல் பாடுகிற வீடியோ

ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க வடிவேலுவின் காமெடியில் மட்டும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை நோக்கிக் காத்துக் கொண்டிருந்த நிலையில் இப்பொழுது வடிவேலு High pitch- ல் பாடுகிற ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் நான்கு பாடும் திறமையும் கொண்ட பாடகராகவும் உள்ள வடிவேலு பாடியுள்ள இந்த பாடல் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இடம்பெறுகிறதா இல்லை வேற படத்திற்காக பாடியுள்ளாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X