Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அட நம்ம வையாபுரியா இது…அசத்தலான கெட்டப்பில் தாறுமாறான போஸ் !
சென்னை : கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
காமெடி நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
பாலாஜியை வெளியேற்றுங்கள்.. அல்லது ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளர் ஆவேசம்!
இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, இளைஞர்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
ஹாட் டாப்பிக்
"யாரு...ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா...", "தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது வையாபுரி யா" இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வர, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள்.
முதல் முறை
ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று சோசியல் மீடியா முழுவதும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வலம் வர, இது பற்றி அவரிடமே கேட்ட போது, "புத்தாண்டில் புதுசாக எதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப சாதாரணமாக எடுத்த போட்டோ ஷூட் தான் இது. இதுவரை நான் போட்டோ ஷூட்டே எடுத்ததில்லை. இது தான் முதல் முறை. இந்த போட்டோக்களை என் திரையுலக நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு என் புதிய கெட்டப் புகைப்படங்களை மக்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அனைத்து வேடங்களிலும் நடிக்க
சில மணி நேரங்களில் பல லட்சம் லைக்குகளை பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். எனது புதிய முயற்சிக்கு மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.இயக்குநர்கள் பலர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, திரைப்படங்களிலும் உங்களை வேறு மாதிரி காட்டணும், என்று கூறுகிறார்கள். இது என் பல நாள் கனவு. காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டும் அல்லாமல், அனைத்து வேடங்களிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். எனது இந்த ஆசையை இந்த போட்டோ ஷூட் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
புது திருப்பம் ஏற்படும்
இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டவர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம், "சார் உங்களை காமெடி நடிகராக இல்லாமல், வேறு ஒரு வேடத்தில் காட்டணும் சார்" என்று சொல்வார்கள், இந்த புகைப்படங்கள் அதை நிஜமாக்கியுள்ளது. எனவே, இந்த புத்தாண்டில் எனது சினிமா வாழ்க்கையில் புது திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.காமெடி வேடத்தில் மட்டும் இன்றி, எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி. அப்பா, அண்ணன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் ஒரு கலக்கு கலக்கப் போகிறேன்." என்று புத்துணர்ச்சியுடன் கூறினார்.
குணச்சித்திர நடிகராகவும்
தற்போது எழில் இயக்கத்தில் இரண்டு படங்கள், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஷர்வானந்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் வையாபுரி, அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் கதாநாயகியின் தந்தை வேடத்தில் நடித்து வருகிறார்.புத்தாண்டில் புதிய முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கும் நடிகர் வையாபுரியை காமெடி நடிகராக கொண்டாடிய கோலிவுட், நல்ல குணச்சித்திர நடிகராகவும் கொண்டாட வேண்டும், என்று வாழ்த்துவோம்.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?