twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமெடி நடிகர் வெங்கல் ராவ் வீடு திரும்பினார்.. ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

    |

    சென்னை : சிறுநீரகப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காமெடி நடிகர் வெங்கல் ராவ் வீடு திரும்பினார்.

    தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு காமெடி ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

    வடிவேலுடன் பல காமெடியில் இணைந்து நடித்து பிரபலமானவர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ், சினிமா வாழ்க்கையில் 25 வருடமாக சண்டை பயிற்சியாளராக இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணக்காரன், ராஜாதி ராஜா போன்ற படங்களில் ஃபைட்டராக இருந்தார். மேலும்,பாலிவுட் ஸ்டார் அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டுள்ளார் வெங்கல் ராவ்.

    Comedy actor Vengal Rao is back home after recovering

    சினிமாவிற்கு வரும் முன்னர் இவர் கோவில் திருவிழாக்களில் கம்பு சுற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டினார். அதன் பின்னர் தான் இவர் சினிமாவில் சண்டை கலைஞராக சேர்ந்தார். ஃபைட்டராக இருந்த வெங்கல் ராவ், 'நீ மட்டும்' என்ற படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். தலைநகரம் படத்தில் கோரில்லா செல் என்ற நகைச்சுவை காட்சியில் ராரா..சரசுக்கு ரா..என வயிறுவலிக்க சிரிக்க வைத்து இருப்பார். வடிவேலுவுடன் இணைத்து மொத்தம் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், இவர் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக விஜய வாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். தற்போது இவர், குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் தரப்பில் விசாரித்தபோது, சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் என்றும் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Comedy actor Vengal Rao is back home after recovering
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X