குவாட்டர் இலவசம்ன்னு சொல்லிப் பாருங்க.. வைரலாகும் வெட்டுக்கிளி மீம்.. பாராட்டித் தள்ளிய விவேக்!
சென்னை: வடமாநிலங்களை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளி படையெடுப்பையும் நக்கலடித்து மீம்கள் பறந்து வருகின்றன.
இந்தியாவுல வெட்டுக்கிளியை விரட்ட கஷ்டப்படுறாங்க, இதே பிரச்சனை சீனாவுக்கு வந்தா வறுத்தே தின்னு இருப்பாங்கன்னு மீம்கள் களைகட்டுகின்றன.
இந்நிலையில், விவேக் காமெடியை வைத்து குவாட்டர் மீம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை ரசித்த விவேக் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கருத்து கந்தசாமி
கலைவாணர் போல நகைச்சுவையில் நல்ல கருத்தையும் வைத்து சொன்னதால் சின்ன கலைவாணர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் விவேக். யூத் படத்தில் கருத்து கந்தசாமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். அவரது பல காமெடி காட்சிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. தற்போது பல பிரச்சனைகளுக்கு மீம்களாகவும் உலா வருகின்றன.

வெட்டுக்கிளி அட்டகாசம்
"வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்" என வள்ளலார் சொன்ன வார்த்தைகள் தற்போது வடமாநிலங்களில் நடைபெற்று வரும் வெட்டுக்கிளி அட்டகாசத்தின் போதும் நினைவுக்கு வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து மக்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்கி வருகின்றன.

வைரலாகும் மீம்கள்
இந்தியாவுல தான் வெட்டுக்கிளி பயிரை மேயுது, சீனாவுக்கு போனால் மக்கள் எல்லாரும் சேர்ந்து வெட்டுக்கிளியை மேஞ்சுருவாங்கடா என்றும், வெட்டுக்கிளி தமிழகத்திற்கு வர வாய்ப்பே இல்லை. வந்தால் வெட்டுக்கிளியுடன் வாழ பழகிக்கோங்க என்றும் பலவிதமான வெட்டுக்கிளி மீம்கள் வைரலாகி வருகின்றன.

குவாட்டர் இலவசம்
இதே போல நடிகர் விவேக்கின் குழாய்ல காத்து வரும் காமெடியை வைத்து, "1000 வெட்டுக்கிளியை பிடிச்சுட்டு வந்தா ஒரு குவாட்டர் இலவசம்ன்னு சொல்லுங்க, ஒரே நாள்ல வெட்டுக்கிளி இனமே அழிஞ்சுடும்" என்ற மீமை பார்த்த நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், "ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க!! யாரை எல்லாம் ஓட்டுறீங்க!! "Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!" என பாராட்டியுள்ளார்.
Recommended Video

20 லட்சம் கோடி
"20 லட்சம் கோடினு சொன்னது பணம்னு நினைச்சியா, அவ்வளவும் வெட்டுக்கிளி என்றும்", கருத்து சொல்ல உங்க டெம்பிளேட் தான் தலைவா கரெக்ட்டா இருக்கு என்றும் கமெண்ட் செக்ஷனில் மேலும் மீம்கள், காமெடிகள் என களைகட்டுகிறது. சிலர், நாட்டில் குடிகாரர்கள் பெருகி விட்டனரே என்று அக்கறையுடன் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











